நிம்மதியான தூக்கம் பெறுவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் இவற்றைப் பின்பற்றுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சிறுநீர் மற்றும் மலத்தை வெளியேற்றிவிட வேண்டும். அடுத்ததாக உடலின் வெளிப்புறங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரால் மூன்று முறை முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும். சோப்பு, கிரீம் எதையும் பயன்படுத்த வேண்டாம்.
இரு உள்ளங்கைகளிலும் தண்ணீரை அள்ளி அந்தத் தண்ணீரில் கண்களைத் திறந்து பார்த்து, கண் விழிகளை கழுவிக்கொள்ள வேண்டும். விரல்களைத் தண்ணீரில் நனைத்து அந்த விரல்களைக் கொண்டு காதுகளைத் தூய்மை படுத்த வேண்டும். மூக்கு துளைகளில் தண்ணீரை உறிஞ்சி மீண்டும் வெளியாக்கி தூய்மை செய்துகொள்ள வேண்டும். கைகளை கை முட்டி வரையிலும், கால்களை கால் முட்டி வரையிலும் தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும்.
உறங்கும் வேளையில் உடலில் மலம் சிறுநீர் தேக்கம் இருந்தால், உடலின் இயக்கம் குறையும், உடலின் கழிவு நீக்க வேலைகள் தடைப்படும், நோயைக் குணப்படுத்தும் வேலைகள் தடைப்படும். கழிவுகள் அதிகமாக இருந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்காது. மன நிம்மதி கெடும், கெட்ட கனவுகள் வரும்.
Leave feedback about this