திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம் அறிமுகம்

திருக்குறள் கூறும் மருத்துவம்

அதிகாரம்: மருந்து
குறள்கள்: 10
விளக்க உரை: ராஜா முகமது காசிம்

திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், ஆரோக்கியமாக வாழ சில ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணங்களையும், நோய்கள் அண்டாமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் எளிய வழிமுறைகளையும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

நோய்களுக்கு தீர்வைத் தேடி பல மருத்துவர்களை நாடும் நாம், திருவள்ளுவர் நோய்களையும் அவற்றை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பற்றி என்ன கூறுகிறார் என்பதை கவனிக்க தவறிவிட்டோம்.

மருந்து அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் இந்த பத்து பாடல்களையும் புரிந்துகொண்டு வாழ்கையில் கடைப்பிடிக்கும் போது. வாழ்நாள் முழுமைக்கும் எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம். ஒருவேளை தற்போது நோய் கண்டவராக இருந்தால், இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது அனைத்து வகையான நோய்களும் நிச்சயமாக குணமாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக திருவள்ளுவர் எழுதிய மருந்து அதிகாரத்தின் குறள்களுக்கு, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப விளக்க உரை எழுத முயற்சி செய்கிறேன். பத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை முழுமையாக வாசியுங்கள். அவற்றை புரிந்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள். மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜா முகமது காசிம்

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X