திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 948

குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குறளின் உரை
ஒருவரின் உடலில் உள்ள நோயைக் குணப்படுத்த வேண்டுமாயின். அது என்ன நோய் என்பதை அறிந்து. அந்த நோய் உடலில் எங்கு எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந்து. அந்த நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவத்தையும் அறிந்து. அந்த மருத்துவத்தை பிழையில்லாமல் முறையாக செய்ய வேண்டும்.

குறள் விளக்கம்
முந்தைய குறள்களில் நோய்கள் அண்டாமல் வாழ வழி சொன்ன திருவள்ளுவர். அவற்றையும் மீறி நோய்கள் உண்டானால். அவற்றை குணப்படுத்திக்கொள்ள சில வழிமுறைகளை அறிவுறுத்துகிறார்.

நோய்க்கண்டவர், தனக்கு என்ன நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நோய் அல்லது உடல் தொந்தரவு உண்டாக காரணமாக இருந்தது எது என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். அந்த உடல் உபாதையை குணப்படுத்த சரியான மருத்துவம் எது என்றும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா மருத்துவங்களாலும் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியாது என்பதால் நோய்க்கு ஏற்ற மருத்துவத்தை நாடவேண்டும் என்கிறார் வள்ளுவர்.

உதாரணத்துக்கு இன்று பெரும்பாலான மக்கள் அவர்களின் நோய்கள் குணமாகாமல் வேதனையில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இன்றைய மனிதர்கள் உடலில் எந்த நோய் தோன்றினாலும் ஆங்கில மருத்துவத்தையே நாடுகிறார்கள். இதை தவறு என்கிறார் திருவள்ளுவர். உடலில் உண்டான உபாதைக்கு ஏற்ப, அதைத் தீர்க்க கூடிய மருத்துவத்தை மட்டுமே நாடவேண்டும் என்கிறார்.

நோயை குணப்படுத்தக் கூடிய மருத்துவத்தை கண்டுபிடித்து மருத்துவம் செய்யும் போதும், அந்த மருத்துவத்தை முறையாகச் செய்ய வேண்டும். அந்த மருத்துவர் கூறுவனவற்றை ஒழுக்கமாகப் பின்பற்ற வேண்டும். இதுதான் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வழிமுறை என்கிறார் திருவள்ளுவர்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X