திருக்குறள்

திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 947

குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின், நோயள வின்றிப் படும்.

குறளின் உரை
தன் உடலுக்கு எந்த உணவு தேவை, எந்த அளவு தேவை என்பதை அறியாமல். அளவுக்கு அதிகமாக உண்பவருக்கு அளவில்லா நோய்கள் உண்டாகும்.

குறள் விளக்கம்
நான் எந்த இனத்தைச் சார்ந்தவன்? என் உடலமைப்பு எப்படிப்பட்டது? என் உடலமைப்புக்கு ஏற்ற உணவு முறை எது? என்று அறிந்து உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உடலமைப்புக்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்பவருக்கும், அளவுக்கு மிகுதியாக உண்பவருக்கும், பல நோய்கள் அண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

எல்லா உணவுகளும் சிறந்தவைதான் ஆனால் அவை அந்த அந்த தேசங்களில் வாழும் மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டவை. ஒரு தேசத்து மக்களுக்கு மிக சிறந்த உணவாக இருக்கும் ஒரு உணவு மற்ற தேச மக்களுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் இறந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை பலர் விரும்பு உண்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள். ஏதோ ஒரு குளிர் பிரதேசத்து அல்லது பாலைவனத்து மக்கள் உண்ணும் உணவு நம் மண்ணில் வாழும் மக்களுக்கு எவ்வாறு உகந்ததாக இருக்கும்?.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field