குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
குறளின் உரை:
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாதவாறு, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை விளக்கி. உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டால். இந்த உடலில் வாழும் உயிர் நோய்களினால் வேதனை அடையாது, துன்பத்தையும் அனுபவிக்காது.
குறள் விளக்கம்
வாதம், பித்தம், கபம், இவை மூன்றும் மாறுபாடு அடையாமல் இருக்க, உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்த்தால், அந்த உடலில் வாழும் உயிருக்கு எந்த வேதனையும் விளையாது என்கிறார். உடலில் வேதனைகள் உண்டானால் அந்த வேதனைகளை அனுபவம் செய்வது உயிர்தானே, அதனால் தான் உயிரைக் குறிப்பிடுகிறார்.
புட்டிகளிலும், பாட்டில்களிலும், பைகளிலும், அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுகளை உட்கொள்வதும். பிஸ்ஸா, பர்கர், பெப்சி, கோக் போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதும். நம் உடலுக்கு ஒத்துப் போகாத உணவுகளை உட்கொள்வதும்; இன்றைய மனிதர்களுக்கு பல நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இதைத்தான் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிச்சென்றார்.