காதலி கவிதை

திருடியவள் நீ

ஒருமுறை திருடியவள் நீ
காணும் பொழுதெல்லாம்
பறிகொடுப்பவன் நான்
மனதை…

தொலைந்த பொருளை
எண்ணி ஏங்குவது
உலக வழக்கம்
திருடியவளை எண்ணி
ஏங்குபவள் நான்

உன்மீது தவறில்லை
நீயே வைத்துக்கொள்
என் மனதை – இனி
உனக்கே சொந்தமாகும்

திருட்டுக்குப் பரிகாரமாக
உன்னை என் மனச் சிறையில்
ஆயுள்கைதியாக அடைகிறேன்
விடுதலை மட்டும் கோராதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X