தினசரி வாழ்க்கையில் ரெய்கி. பெரும்பாலான மனிதர்கள் தன்னை அறியாமல் தினசரி வாழ்க்கையில் ரெய்கி ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாருக்காவது தலைவலி, வயிற்று வலி, கால் வலி, மூட்டு வலி, போன்றவை உருவானால் தன் கரங்களால் வலிக்கும் இடத்தை தேய்த்துக் கொடுக்கிறார்கள், அவர்களின் வலியும் குறையத் தொடங்குகிறது. இது ஒரு வகையான செல்ப் ஹீலிங் (சுய சிகிச்சை).
ஒரு குழந்தை காரணம் இல்லாமல் அழுது கொண்டிருந்தால், அதன் தாய் அந்த குழந்தையை தன் கரங்களால் வருடிவிடுகிறார், தடவிக் கொடுக்கிறார். சற்றுநேரத்தில் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிடுகிறது. விலங்குகளுக்கு காயங்கள் ஏற்பட்டால், அவை காயம்பட்ட இடத்தை நக்கிக் கொண்டிருக்கும், அதன் காயங்களும் விரைவில் குணமாகும்.
நம் அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப் பட்டாலோ, ஏதாவது பிரச்சனையில் சிக்கியிருந்தாலோ, அல்லது கவலையில் மூழ்கி இருந்தாலோ, நாம் அவரின் கைகளைப் பற்றி ஆறுதல் கூறுகிறோம் அல்லது அவரை கட்டியணைத்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறுகிறோம்.
இவ்வாறான சூழ்நிலைகளில், உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்றால், வார்த்தைகளின் மூலமாகவும், ஓசையின் மூலமாகவும், நமது ஆற்றல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இவையும் ஒரு வகையில் சிகிச்சை முறைகள் தான்.
ரெய்கி ஆற்றல் (பிரபஞ்ச ஆற்றல்) குறைவாக இருப்பதனால் தான், அவர்களுக்கு உடலிலும் மனதிலும் நோய்களும், வாழ்க்கையில் தொந்தரவுகளும் உருவாகின்றன. நம் மூலமாக அவர்களுக்கு கிடைத்த ஆற்றல், அவற்றிலிருந்து வெளிவர அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
Leave feedback about this