தண்ணீர் அருந்துவதைப் பற்றிய தவறான நம்பிக்கைகள். துணிமணியில் அழுக்கு இருந்தால் தண்ணீரைக் கொண்டு துவைத்து சுத்தம் செய்கிறோம். தரையில் அழுக்கு இருந்தால் தண்ணீரை ஊற்றிக் கழுவி சுத்தம் செய்கிறோம். சாக்கடையில் அடைப்பு இருந்தால் அதிகமாகத் தண்ணீரை ஊற்றினால் அடைப்பு நீங்கி சுத்தமாகிறது. தண்ணீரைப் பயன்படுத்தி பெரும்பாலும் அனைத்து வகையான அழுக்குகளையும் நீக்கிக் கொள்கிறோம்.
இவற்றைப் போன்றே தண்ணீரை அதிகமாக அருந்தினால் உடலில் இருக்கும் அழுக்குகளும் கழிவுகளும் சுலபமாக நீங்கி, உடல் சுத்தமாகும் அல்லவா? அதிக அளவில் தண்ணீர் அருந்தும் பலர் இவ்வாறு தான் எண்ணுகிறார்கள்.
சற்று ஆழமாகச் சிந்தித்தால் புரியும் உடலின் அமைப்பு வேறு சாக்கடையின் அமைப்பு வேறு. துணி, தரை, சாக்கடை அல்லது எந்தப் பொருளைச் சுத்தம் செய்ய நினைத்தாலும் தண்ணீரை அவற்றில் நேரடியாக ஊற்றலாம்.
உடலின் வெளிப் பகுதியில் அழுக்கு இருந்தால் தண்ணீரை நேரடியாக ஊற்றிக் கழுவி சுத்தம் செய்யலாம். ஆனால் உடலில் உட்பகுதியில் அவ்வாறு நேரடியாக ஊற்ற முடியாது, உடலின் அமைப்பு அதற்கு ஒப்புக்கொள்ளாது.
நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் அது வயிற்றைத்தான் சென்றடையும். வயிற்றில் அது ஜீரணம் செய்யப்பட்டு, உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரும் தண்ணீரின் சத்துக்களும் உறிஞ்சப்பட்டு தேவையற்றவை சிறுநீராக வெளியேற்றப்படும்.
அதிகமாகத் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். அவர்கள் உடலின் கழிவுகள் வெளியேறுவதாகக் கூட நம்பலாம். உண்மையில் அவர்களின் உடலின் தேவைக்கும் அதிகமாக அருந்திய தண்ணீர் தான் வெளியேறுகின்றன.
நான் எனது விருப்பப்படி அதிகமாக தண்ணீர் அருந்துகிறேன், உடல் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை வெளியேற்றட்டும் என்று எண்ண முடியாது; காரணம் நீங்கள் அருந்தும் தண்ணீரை ஜீரணிப்பதில் உடல் உறுப்புகள் அனைத்தும் இணைந்து இயங்குகின்றன.
சிறுநீராக வெளியேறப் போகும் நீரை, வயிறு, மண்ணீரல், குடல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவை இணைந்து செயல்பட்டு சுத்தப்படுத்தி பதப்படுத்துகின்றன.
சிறுநீராக வெளியேறப் போகும் தண்ணீருக்கு உடலின் இத்தனை உறுப்புகள் சேர்ந்து உழைப்பது வீண் வேலை தானே? இவ்வாறான தேவையற்ற உடல் உழைப்புகளைச் செய்வதால்தான் பலருக்கு உடலின் உள்ளுறுப்பு பாதிப்புகள் உருவாகின்றன.
குறிப்பாக உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவதால் வயிறும் சிறுநீரகங்களும் விரைவாகப் பழுதாகின்றன. இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை வியாதியும் சிறுநீரகப் பாதிப்புகளும் அதிகமாக உருவாவதற்குத் தேவையில்லாமல் தண்ணீர் அருந்தும் பழக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவை எவ்வாறு அறிந்து கொள்வது?
உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவு என்பது உடல் அமைப்பிற்கும், உணவு முறைக்கும், உடல் உழைப்புக்கும் ஏற்ப ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும்.
உடலின் தண்ணீர்த் தேவையை உணர்த்துவது தாகம் என்ற உணர்வு. உடலில் தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். அதுவும் தாகம் மறையும் அளவு மட்டுமே அருந்த வேண்டும்.
எத்தனை தடவை தாகம் உண்டானாலும் தண்ணீர் அருந்தலாம் தப்பில்லை. தாகம் உருவாகும் வரையில் காத்திருங்கள் தாகம் உண்டானால், தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.
Leave feedback about this