தனி மனிதனின் வாழ்க்கை
தனி மனிதனின் வாழ்க்கையை பல்வேறு விசயங்கள் நிர்ணயம் செய்கின்றன. குறிப்பாக கீழே குறிப்பிட்டுள்ள பத்து விசயங்கள்.
1. பிறந்த நாள் – நேரம்
2. குடும்ப சூழ்நிலை
3. சமுதாய அமைப்பு
4. வளர்ந்த சூழ்நிலை
5. சுற்றமும் நட்பும்
6. இளமை கால அனுபவம்
7. கல்வி அறிவு – தன்னம்பிக்கை
8. மதம் – நம்பிக்கை
9. உழைப்பு – விடாமுயற்சி
10. தற்போதைய கிரக நிலை
மனிதர்களின் வாழ்க்கையை பல்வேறு விசயங்கள் இணைந்து நிர்ணயிப்பதனால் ஏதாவது ஒன்றைப் பார்த்து அச்சப்படவோ வேதனைப்படவோ தேவையில்லை. இவற்றில் ஏதாவது ஒன்று சரியாக இருந்தால் அதனைத் துணைக் கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தை அடைந்து விடலாம். எந்த மனிதனின் வாழ்க்கையிலும் அனைத்து விசயங்களும் அவனுக்குச் சாதகமாக அமைவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சில விசயங்கள் சாதகமாகவும் சில விசயங்கள் பாதகமாகவும் அமைவது தான் இயல்பு.
உங்களின் பலவீனம் என்ன? எது உங்களுக்கு குறைவாக இருக்கிறது? என்பதில் கவனம் செலுத்தாமல்; எது உங்களுக்குச் சரியாக அமைந்திருக்கிறது? இந்த வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் என்ன? என்பதைச் சற்று ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்பட்டால் நீங்கள் தொட விரும்பும் உயரத்தை எளிதாக அடைந்து விடலாம்.