பொருளாதாரம்

தங்கம் நிரந்தர மதிப்புடையது

தங்கம் நிரந்தர மதிப்புடையது. உலகம் இருக்கும் காலம் வரையில் தங்கம் பண்டமாற்று பொருளாகவும், பரிவர்த்தனை பொருளாகவும் நிலைத்திருக்கும். இன்று நாம் பயன்படுத்தும் காகிதப் பணம் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக பல வகையான பண வகைகள் பயன்பாட்டில் இருந்தன பின் பயன்பாட்டிலிருந்து அவை மறைந்துவிட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை போன்று; பல நாடுகளில், பல காலகட்டங்களில் அவற்றின் அரசாங்கங்கள் அன்று பயன்பாட்டில் இருந்த பணமும் காசும் செல்லாது என்று அறிவித்துள்ளன. அதனால் பலர் தன் செல்வங்களை இழந்துள்ளனர்.

ஆனால் பண்டைய காலம் முதலாக எந்த காலத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியை மட்டும் யாரும் செல்லாது என்று சொன்னது கிடையாது, சொல்லவும் மாட்டார்கள். தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே உண்மையான மதிப்பு மாறாத செல்வங்களாகும் உண்மையைச் சொல்வதானால் ஒரு நாட்டின் பணம் என்பது உண்மையில் நிலையான மதிப்புடைய ஒரு பொருளே அல்ல. அதைப்போன்றே வைரமும் மற்ற இரத்தினங்களும் கூட நிலையான மதிப்பற்றவை.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருநூறு ரூபாய்கள் கொடுத்து வாங்க வேண்டும், அதே பொருளை இன்று வாங்க ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும். ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையாக தெரிந்தாலும், அறுபது ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு இருபதில் ஒன்றாக குறைந்துவிட்டது.

இன்று பெரும்பாலான மக்கள் விலைவாசி அதிகரித்துவிட்டதாக கவலை தெரிவிக்கிறார்கள், உண்மையில் பொருளின் விலைகள் அதிகரிக்கவில்லை மாறாக பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதால், நாம் அதிகப் பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதைத்தான் பணவீக்கம் என்பார்கள். தொகை பெரிதாக இருக்கும் ஆனால் அந்த தொகைக்கான மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

பணம் என்பது நிலையான மதிப்பில்லாத, எந்த நேரத்திலும் மதிப்பு குறையக் கூடிய ஒரு பொருள். இந்த உலகில் எங்குச் சென்றாலும், எல்லா சூழ்நிலையிலும் மதிப்பு மாறாமல் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள் தங்கம், அதற்கு அடுத்தது வெள்ளி.

அதனால் பணக் கையிருப்பு அதிகமாக உள்ளவர்கள் அவற்றை தங்கமாகவோ, வெள்ளியாகவோ மாற்றி வைத்தால், அவற்றின் மதிப்பு மாறாமல் இருக்கும். மேலும் அவற்றின் மதிப்பு அதிகரிக்க சாத்திய கூறுகளும் அதிகம்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field