தலைச்சுற்றல் குணமாக வீட்டு கை மருத்துவம்
வீட்டு மருத்துவம்

தலைச்சுற்றல் குணமாக வீட்டு கை மருத்துவம்

தலைச்சுற்றல் குணமாக வீட்டு கை மருத்துவம். கீழே பார்க்கும் போதும், குனிந்து நிமிரும் போதும் உண்டாகும் தலைச்சுற்றலுக்கு பயன்படுத்தி பயன்பெற்ற வீட்டு மருத்துவம்.

தேவையான பொருட்கள் (ஒரு வேளைக்கு)

இஞ்சி ஒரு இன்ச் அளவு
எலுமிச்சை பழம் நான்கில் ஒரு பகுதி (¼) தோலுடன்.

1. இஞ்சியின் தோலை நீக்கி, நசுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு டம்ளர் தண்ணீரில் இவை இரண்டையும், ஐந்து நிமிடங்கள் சிறிய நெருப்பில் கொதிக்கவிடவும்.

3. பிறகு, வடிகட்டி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்துவர தலைச்சுற்றல் குறையும் சரியாகும்.

4. இரண்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வர நல்ல மாற்றம் உண்டாகும்.

பயன்படுத்தி பலன் பெற்ற அனுபவங்களையே பகிர்ந்துகொள்கிறேன் தேவையானவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம், நன்றி.

Gowri
9345089064
gowriakshayaa21@gmail.com

Leave feedback about this

  • Rating
X