தடுப்பூசியின் பக்க விளைவுகள். தடுப்பூசியின் உடனடி பக்க விளைவுகள். நோய் எதிர்ப்புச் சக்திக்காகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் தடுப்பு ஊசிகள் பல்வேறு வேதிப்பொருட்களாலும் ரசாயன கலவைகளாலும் உருவாக்கப்படுகின்றன. அவை சிலருக்கு ஒத்துப் போகலாம் சிலருக்கு சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
தடுப்பூசிகளால் பெரும்பாலான நபர்களுக்கு உருவாகக்கூடிய உடனடி பக்க விளைவுகள். உடல் சோர்வு, உடல் வலி, கை கால் மூட்டு வலி, மறதி, வாதம், ஆண்மை பெண்மை கோளாறுகள், அவை மேலும் பல வகையான பக்கவிளைவுகளையும் உருவாக்கக் கூடியவை. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மேலே உள்ளதைப் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் புதிதாக ஏதோ உடல் உபாதை உருவாகிவிட்டது என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.
செலுத்திக்கொண்ட தடுப்பூசியின் பக்க விளைவுகளால் இவை உருவாகியுள்ளன என்பதைப் புரிந்து கொண்டு உணவு உட்கொள்வதைக் குறைத்துக்கொண்டு, அசைவ உணவுகளைத் தவிர்த்துக் கொண்டு, காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இரவில் விரைவாக உறங்கி உடலுக்கு போதிய ஓய்வைக் கொடுக்க வேண்டும். இவற்றைச் சரிவரச் செய்து வந்தாலே மிக விரைவில் உங்கள் தொந்தரவுகள் அனைத்தும் குணமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.