பொருளாதாரம்

தெளிவாக திட்டமிட வேண்டும்

தெளிவாக திட்டமிட வேண்டும். வியாபாரத்தை தொடங்குவதற்கு முன் தெளிவாக திட்டமிட வேண்டும். புதிதாகத் தொடங்கப்படும் வியாபாரங்களில் 95% வியாபாரங்கள் முதல் ஐந்து வருடங்களிலேயே மூடப்படுகின்றன என்று ஒரு ஆய்வு முடிவு காட்டுகிறது.

புதிதாக வியாபாரத்தைத் தொடங்கும் யாரும் வேண்டுமென்றே திட்டமிட்டுத் தோற்றுப் போவதில்லை. ஆனால் ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக சரியாகத் திட்டம் தீட்டாத அனைவரும் வியாபாரத்தில் தோற்றுவிடுகிறார்கள்.

சிறிய வியாபாரமோ, பெரிய வியாபாரமோ எந்த வியாபாரத்தையும் தொடங்குவதற்கு முன்பாக முதல் வேலையாக தெளிவாகத் திட்டமிட வேண்டும்.

1. என்ன வியாபாரம் அல்லது சேவையைத் தொடங்கப் போகிறோம்?

2. அந்த வியாபாரத்தில் நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது?

3. தொடங்கவிருக்கும் வியாபாரத்திற்கு மக்களிடையே எவ்வளவு தேவை இருக்கிறது?

4. அந்த வியாபாரத்தை எந்த இடத்தில் தொடங்கினால் சரியாக இருக்கும்?

5. அந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள் யார்?

6. அந்த வியாபாரத்தைத் துவங்க எந்த இடம் சரியாக இருக்கும்?

7. இந்த வியாபாரத்தைத் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

8. அந்த வியாபாரம் எவ்வளவு லாபம் தரும்?

9. எத்தனை ஆண்டுகள் இந்த வியாபாரத்திற்கான தேவை இருக்கும்?

10. முதலீடு செய்த பணத்தை எடுக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

11. தற்போது அந்த வியாபாரத்தைச் செய்பவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்.

12.அந்த வியாபாரத்தில் மேலும் உள்ள நன்மை தீமைகளைச் சிந்தித்துப் பார்த்து ஆராய வேண்டும்.

இவை போன்று நமக்கு நாமே பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில் தேடி ஒரு வியாபாரத்தைத் திட்டமிட வேண்டும். நன்றாக ஆராய்ந்து ஒரு வியாபாரத்தைத் தொடங்க தேவையான முதலீடு, விற்பனை செய்யப்படும் பொருள், வியாபாரம் செய்யும் இடம், வாடிக்கையாளர்கள், வியாபாரத்தில் ஈட்டக்கூடிய லாபம், வியாபாரத்தில் உருவாக்கக்கூடிய செலவு, என்று பலவற்றைத் திட்டம் தீட்ட வேண்டும்.

ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக குறுகிய காலத்திட்டம், நெடுங்கால திட்டம், அவசரக் காலத்திடம், என்று பல்வேறு திட்டங்களைத் தீட்டி தெளிவாக ஆராய்ந்த பின்னர் தான் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்..

யாரையும் பார்த்து அவசரப்பட்டு அல்லது ஆசைப்பட்டு எந்த வியாபாரத்தையும் தொடங்கக்கூடாது. அவசரக் கதியில் தொடங்கப்படும் வியாபாரங்கள் தான் பெரும்பாலும் அவசரமாக மூடப்படுகின்றன. தெளிவான திட்டமிடலுடன் தொடங்கப்படும் வியாபாரங்கள் தொடர்ந்து நிலைத்து நின்று லாபமீட்டக்கூடிய நிறுவனங்களாக இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1 Comment

  • Arulmoorthi S August 1, 2023

    சிறப்பான பதிவு. மேலும் ஜாதக ரீதியாக புதனுடைய தன்மையையும் பார்த்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X