வாழ்க்கை

பிள்ளைகளுக்கு தமிழ் வாசிக்க கற்றுக் கொடுங்கள்

பிள்ளைகளுக்கு தமிழ் வாசிக்க கற்றுக் கொடுங்கள். இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் கல்வி என்றால் என்ன என்பதுதான் பெரும்பாலான நபர்களுக்கு புரிவதில்லை. பெரும்பாலான நபர்கள் பள்ளிக்கூடத்திலும் கல்லூரிகளிலும் பயில்வது தான் கல்வி என்று எண்ணுகிறார்கள்.

இன்றைய கல்விமுறையும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் தோன்றுவதற்கு முன்பாகவே நம் இனம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குச் சான்றாக காலத்தால் அழியாத பல நூல்கள் இன்றும் நாம் பயன்பாட்டில் உள்ளன.

பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொள்ளும் பாடமானது வேலைக்குச் செல்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் உதவியாக இருக்கும். ஆனால் வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்? என்பன போன்ற முக்கியமான விசயங்களைப் புரிந்து கொள்வதற்கு நமது முன்னோர்கள் எழுதிய அற நூல்களையும் ஆன்மீக நூல்களையும் வாசிக்க வேண்டும்.

நமது மண் சார்ந்த அற நூல்கள் மற்றும் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விளக்கக்கூடிய தத்துவங்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன. தமிழ் மொழியை வாசிக்கத் தெரிந்த ஒருவரால் மட்டுமே இந்த தத்துவங்களை வாசித்துப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.

மனித வாழ்க்கையின் முக்கியமான கூறுகளையும் அம்சங்களையும் புரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகும். அதற்கு அவனது தாய் மொழியை வாசிக்க தெரிந்திருப்பது மிகவும் இன்றி அமையாது ஒன்று.

தமிழ் மொழியை வாசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே தமிழ் மொழியில் மட்டுமே இருக்கக்கூடிய மேன்மையான ஆன்மீக ஞானங்களையும் தத்துவங்களையும் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடியும். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

தமிழ் மொழி அறியாத குழந்தைகள் மிக உயர்வான பல அறிவையும் ஆன்மீக ஞானத்தையும் இழந்து விடுவார்கள். அந்த குழந்தைகளுக்குத் தெரியாததால் அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியாமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *