சுய இன்பத்தினால் ஆண்களுக்கு விளையும் தீமைகள். சுய இன்பம் அல்லது ஆங்கிலத்தில் (masturbation) என்று அழைக்கப்படும் இந்த தீய பழக்கம். இன்றும் சர்வ சாதாரணமாக பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்களின் பாலுணர்வைத் தூண்டக்கூடிய வகையில் வெளிவரும் விளம்பரங்கள், பத்திரிக்கைகள், கதைகள், படங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கத்தினால் மெல்லப் பரவி வந்த இந்த பழக்கம், இணையத்தின் அறிமுகத்திற்குப் பிறகு பல மடங்கு அதிகரித்து விட்டது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சில ஆங்கில மருத்துவர்கள், சுய இன்பம் காண்பதால் உடலுக்கு கேடு ஒன்றுமில்லை என்று கூறிவருகின்றனர். இதை அறியாமை என்றுதான் கூற வேண்டும். இயற்கைக்கு மீறிய எந்த ஒரு பழக்கமும் செயலும் நிச்சயம் ஒரு தீய விளைவை உண்டாக்கும்.
சுய இன்பம் காண்பதால் உடலுக்கு உண்டாகக் கூடிய தீங்குகள்.
1. உடலில் சத்துக்கள் வீண் விரயமாகின்றன.
2. நரம்பு மண்டலங்கள் பலவீனமடைகின்றன.
3. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
4. மூட்டுக்கள் பலவீனமடைகின்றன.
5. இடுப்பு எலும்பு மற்றும் முதுகெலும்பின் பலம் குறைகின்றன.
6. ஆணுறுப்பின் உணர்வும் உணர்ச்சிகளும் குறையும்.
7. ஆணுறுப்பின் வீரியமும் விறைப்புத் தன்மையும் குறையும்.
8. திருமணத்துக்குப் பின் உடலுறவில் திருப்தி இருக்காது.
9. மனைவியுடன் கூடும் போது முழுமையான சுகத்தை அனுபவிக்க முடியாது.
10. திருமணத்துக்குப் பின் விந்து முந்துதல், வீரியமின்மை, நாட்டமின்மை போன்ற குறைபாடுகள் உருவாகும்.
இன்னும் பல உடல் உபாதைகளுக்கு சுய இன்பம் காணும் பழக்கம் காரணமாக இருப்பதனால், இந்த பழக்கத்தை உடனே கைவிட வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பத்திரிகைகள், கதைகள், படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்க்காமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.