சிறுவர்கள் இரவில் விழித்திருந்து படிக்கலாமா?
இரவில் உறங்கும் போது மட்டுமே உடலில் நடக்கக்கூடிய வேலைகளான, நோய்களைக் குணப்படுத்தும் வேலையும், கழிவுகளை வெளியேற்றும் வேலையும், இரவில் விழித்திருந்தால் நடக்காது. அதனால் சிறுவர்கள் இரவில் விழித்திருந்து படிக்கும் போது அவர்களின் உடலில் சக்தி குறைபாடும், மறதியும், மலச்சிக்கலும், நோய்களும் உண்டாகும்.
சிறுவர்கள் இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். காலை 4 மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். அதிகம் படிக்க வேண்டும், வீட்டுப்பாடம் செய்யவேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கும் சிறுவர்கள் இரவு 9 மணிக்குப் படுத்துவிட்டு காலை 4 மணிக்கு எழுந்து படிக்கலாம்.