சிறிய முதலீட்டில் லாபம் தரக்கூடிய கிரிப்டோ நாணயங்கள். முதலீட்டுக்காக கிரிப்டோ நாணயங்களை வாங்க விரும்புபவர்கள், பிட்காயின், எத்திரியம், போன்ற அதிக விலையுடைய நாணயங்களைத் தான் வாங்க வேண்டும் என்று பெரும்பாலும் எண்ணுகிறார்கள், விரும்புகிறார்கள். விலை அதிகரித்த அல்லது பிரபல்யமான நாணயங்களை வாங்கினால் தான் லாபம் கிடைக்கும் என்று பலர் எண்ணுகிறார்கள் இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.
கிரிப்டோ நாணயங்களின் லாபம் என்பது, பங்குச் சந்தையை ஒத்ததாகும். நாம் எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பதையும், எந்த நாணயத்தை வாங்குகிறோம் என்பதையும், அந்த நாணயத்தின் விலை எத்தனை விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதையும் பொறுத்தே அமையும்.
உதாரணத்திற்கு நீங்கள் நூறு டாலர் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நூறு டாலரை எந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
Coin – நாணயம் | முதலீடு | விலை உயர்வு | லாபம் |
Bitcoin $57,720 | $100 | 5% | $5 |
Ethereum $2,046 | $100 | 5% | $5 |
Litecoin $224 | $100 | 5% | $5 |
BitTorrent – $0.009466 | $100 | 5% | $5 |
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தால் புரியும், நீங்கள் எந்த நாணயத்தை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை. அந்த நாணயத்தின் விலை என்ன என்பதும் முக்கியமில்லை. எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறீர்கள் மாற்று நீங்கள் வாங்கிய நாணயம் எத்தனை விழுக்காடு உயர்கிறது என்பதே முக்கியம். பெரும்பாலும் பிட்காயினின் விலை எங்கு செல்கிறதோ அங்குதான் மற்ற நாணயங்களின் விலையும் செல்லும்.
கீழே குறிப்பிட்டுள்ள நாணயங்கள் ஒரு டாலருக்கு குறைவான விலையுடையவை. பெரும்பாலும் சில காசுகள் மட்டுமே மதிப்புடையவை ஆனால் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்து, நல்ல இலாபத்தைத் தரக்கூடிய நாணயங்கள். விலை குறைந்த தரமான நாணயங்கள் விரைவாக விலை அதிகரிக்கக் கூடியவை. அவற்றை விற்பனை செய்யவும், மாற்றிக் கொள்ளவும் எளிதாக இருக்கும்.
சிறிய முதலீட்டில் லாபம் தரக்கூடிய கிரிப்டோ கரன்சிகள்
- XRP- XRP
- NEO – NEO
- EOS EOS
- UMA – UMA
- Stellar – XLM
- BitTorrent – BTT
- Cardano – ADA
- Litecoin – LTC
- Basic Attention Token – BAT
- Ethereum Classic- ETC
- Uniswap – UNI
- Polkadot – DOT
- Holo – HOT
- Decentraland – MANA
- Dogecoin – DOGE
- Tron – TRX
- Crypto.com CRO
- Chainlink – LINK
- Ziliqa – ZIL
- Chiliz – CHZ
- IRISnet – IRIS