பொருளாதாரம்

சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் முதலீடு செய்வதற்குரிய பங்கை (stock) தேர்வு செய்வதற்கு முன்னதாக முதலில் சரியான துறையை (sector) தேர்ந்தெடுக்க வேண்டும். வாகனம், மின்சாரம், வாங்கி, தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், போன்று ஒரு சில துறைகளை ஆராய்ந்து, ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி அடையக்கூடிய, குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கக்கூடிய சரியான துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் இருந்து உறுதியான, நேர்மையான, சரியான நிர்வாகத் திறமையும் கொண்ட, குறைந்தது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் நிறுவனங்களைக் கண்டறிய வேண்டும்.

இவற்றைக் கண்டறிய …

  1. அந்த நிறுவனத்தின் நிர்வாகம்
  2. மூன்று ஆண்டுகளின் நிதிநிலை
  3. மூன்று ஆண்டுகளின் விற்பனை
  4. மூன்று ஆண்டுகளின் வருமானங்கள்
  5. மூன்று ஆண்டுகளின் பணக் கையிருப்பு
  6. மூன்று ஆண்டுகளின் கடன்
  7. மூன்று ஆண்டுகளின் லாபம் நஷ்டம்

போன்ற பல விசயங்களை ஆராய வேண்டும்.

கடன் இல்லாமல், குறைந்தது மூன்று ஆண்டுகளாக நல்ல லாபமும், பணக் கையிருப்பும், அதிகரிக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தொடக்கத்தில் பெரிய நிறுவனங்களில் (large cap) மட்டுமே முதலீடு செய்வது உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கும்.

சிறந்த நிறுவனமாக இருந்தாலும் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்காமல் அந்த பங்கின் விலை குறையும்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிலிருந்து பத்து பங்குகள் வரையில் வாங்குவது நல்லது மேலும் பாதுகாப்பானது.

குறைந்தது ஐந்து ஆண்டுகள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முடியாது என்றால் நீங்கள் பங்குச் சந்தையில் நுழையாமல் உங்கள் பணத்தை வங்கியில் நிலையான இருப்பில் (fixed deposit) வைப்பது சிறந்தது.