ஆரோக்கியம்

சைவம் உட்கொள்பவர்களுக்கு சத்து மாத்திரைகள் தேவைப்படுமா?

சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு தனியாக ஊட்டச்சத்து மாத்திரைகள் தேவைப்படுமா?

சைவம் சாப்பிடுபவர்கள் சிலர் தங்கள் உடலுக்கு சத்து பற்றாக்குறைக்கு ஏற்படும் என்று பயந்து சில சத்து மாத்திரைகளை உட்கொள்வது உண்டு. மருத்துவர்கள் கூட சில வேளைகளில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு சில சத்து மாத்திரைகளை பரிந்துரைப்பது உண்டு.

சைவம் உண்பவர்களுக்கு சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் கூட நோயாளிகளுக்கு நோய்கள் விரைவில் குணமாக காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உண்ணுங்கள் என்றுதான் அறிவுரை கூறுவார்கள்.

இந்த உலகில் எந்த ஒரு மருத்துவரும் தனது நோயாளிகளுக்கு உங்கள் நோய்கள் குணமாக வேண்டும் என்றால் அதிகமாக மாமிசங்களை உண்ணுங்கள் என்று பரிந்துரைக்க மாட்டார்கள்; மாறாக மாமிசங்கள் உண்ணுவதை நிறுத்துங்கள் என்று தான் பரிந்துரைப்பார்கள். நோயாளிகள் மாமிசம் உட்கொண்டால் நோய்கள் இன்னும் அதிகரிக்கும் நோய்கள் குணமாக தாமதமாகும் என்பதால் தானே மருத்துவர்கள் அவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

இயல்பான வாழ்க்கை முறையினால் மாமிசங்களை தவிர்ப்பவர்களுக்கு உடலில் எந்த சத்துக் குறைபாடும் உண்டாகாது. அதனால் அவர்களுக்கு தனியாக எந்த சத்து மாத்திரையும் தேவையில்லை. சத்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பது வெறும் வியாபாரமே அன்றி வேறொன்றும் கிடையாது.

X