சர்க்கரை நோய் என்பது உண்மையில் என்ன? இந்தக் கட்டுரையை வாசித்தால் “என்னது இதுதான் சர்க்கரை நோயா? இதைக் காட்டியாடா எங்களை இத்தனை நாளா பயமுறுத்தினிங்க” என்று நிச்சயமாகத் தோன்றும்.
இனிப்பு நீர், சர்க்கரை நோய், நீரிழிவு நோய், ஆங்கிலத்தில் டைபெடிக் என்று அழைக்கப்படும் இந்த நோயை. மிகக் கொடியது மிகவும் ஆபத்தானது, அது உங்களைக் கொன்றுவிடும் என்று ஆங்கிலப் படத்துக்கு தமிழில் டப்பிங் பேசுவது போன்று சொல்வார்கள். இது மிகவும் ஆபத்தான கொடிய மிருகம் ஓடுங்கள், உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பது போலச் சொல்வார்கள். உண்மையில் எல்லாம் பொய்.
உண்மையிலேயே கொடிய மிருகம் மருந்து கம்பெனி காரர்கள்தான். இரசாயனங்களைக் கொண்டு மனித உடலுக்கு ஒவ்வாத மிகவும் கேடான பக்கவிளைவுகளை உருவாக்கக் கூடிய மருந்துகளை உருவாக்கும் மருந்து கம்பெனி முதலைகள், அந்த மருந்துகளை விற்பனை செய்வதற்காக திட்டமிட்டு நோயாளிகளை உருவாக்குகிறார்கள். ஒன்றும் அறியாத ஆங்கில மருத்துவர்கள் அவர்களுக்குத் துணை போகிறார்கள்.
என்னது ஆங்கில மருத்துவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம் அவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் தான். இந்தப் பூமி எவ்வாறு இயங்குகிறது? அவர்களுக்குத் தெரியாது. மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது? அவர்களுக்குத் தெரியாது. நோய்க்கும், கழிவு நீக்கத்திற்கு உள்ள வித்தியாசம் என்ன? அவர்களுக்குத் தெரியாது. நோய்கள் எதனால் உருவாகின்றன? அவர்களுக்குத் தெரியாது. நோய்களை எவ்வாறு குணப்படுத்துவது? அவர்களுக்குத் தெரியாது. உண்மையில், பல ஆங்கில மருத்துவர்களுக்கு மருத்துவமே தெரியாது.
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம், இந்த தொந்தரவுக்கு இந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். அந்தத் தொந்தரவுக்கு அந்த மருந்தைக் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். முதலில் ஒரு நோய் ஏன்? எவ்வாறு? உருவாகிறது என்று அறிந்துக் கொண்டால் மட்டுமே அந்த நோயைக் குணப்படுத்த முடியும். வெறும் இயந்திரங்கள் சொல்வதை நம்பிக்கொண்டு மருத்துவம் பார்த்தால் நோய்கள் எவ்வாறு குணமாகும்?
சர்க்கரை என்பது நோயா?
ஒரு மனிதனுக்கு சர்க்கரை நோயினால் காலில் புண் உருவாகி, பின்பு அழுகிவிட்டது. அந்தக் காலை வெட்ட வேண்டும் என்று ஆங்கில மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக எதை நோயாளியின் உடலில் ஏற்றுவார்கள் தெரியுமா? குளுக்கோஸ்! குளுக்கோஸ் என்பது சர்க்கரை நீர். சர்க்கரை அதிகமாகித் தான் கால் அழுகிவிட்டது என்று கூறினீர்களே பின்பு எதற்காக இப்போது மீண்டும் சர்க்கரையை என் உடம்பில் ஏற்றுகிறீர்கள் என்று எந்த நோயாளியும் கேட்பதில்லை.
பிரசவம், விபத்து, எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என எந்த அவசரச் சிகிச்சையாக இருந்தாலும் குளுக்கோஸ் என்ற சர்க்கரையைத் தானே ஆங்கில மருத்துவர்கள் மனித உடலில் முதலில் ஏற்றுவார்கள். அவ்வாறென்றால் மனித உடலில், அவசரக் காலத்தில் சர்க்கரை அதிகமாகத் தேவைப்படும், மனிதனின் நோய்களைக் குணப்படுத்த சர்க்கரை அதிகமாகத் தேவைப்படும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் தானே.
அப்படியானால் எதனால் உடல் சுயமாகச் சர்க்கரையை அதிகரித்தால் நோய் என்றும் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள் இதே ஆங்கில மருத்துவர்கள்?
அவர்கள் செயற்கையாக உருவாக்கிய குளுக்கோஸ் மருந்தாம் உயிரைக் காப்பாற்றுமாம், மனித உடல் இயற்கையாக உருவாக்கிய சர்க்கரை கெடுதியாம் உயிரைக் கொல்லுமாம். ஏண்டா உனக்கு வந்தால் இரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று யாரும் கேட்பதில்லை! இனிமேல் கேளுங்கள்.
சர்க்கரை கெடுதி என்றால், சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது ஏன் மயக்கம் அடைகிறார்கள். சர்க்கரை அதிகரிப்பது நோய் என்றால் குறைவது நல்லது தானே, பின்பு எதனால் மயக்கம் உண்டாகிறது? சர்க்கரை கெடுதி என்றால் மருத்துவர்கள் எதனால் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் என்ற சர்க்கரையை உடலில் செலுத்துகிறார்கள்.
இனிப்பு நல்லது
மனித உடலுக்கு இனிப்பு மிகவும் அவசியமானது. இனிப்பு இல்லாமல் எந்த மனிதனும் இயங்க முடியாது, எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. உடலில் சர்க்கரை போதிய அளவு இருந்தால் மட்டுமே உடலால் ஆரோக்கியமாக இயங்க முடியும். அவசரக் காலங்களில் சர்க்கரை அதிகரித்தால் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும்.
உடலின் இயல்பான நோய் தீர்க்கும் முறையான சர்க்கரை அதிகரிப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில மருத்துவர்களிடம் வருகின்ற அனைவரையும் நோயாளிகளாக மாற்றுகின்றனர்.
வேலியில் போகிற ஓணானை, வேட்டிக்குள் பிடித்து விட்ட கதையாக. ஆங்கில மருத்துவர்களிடம் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.