சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?
உணவை உட்கொள்ளும் போது அதிகமாக தண்ணீர் அருந்தினால், ஜீரணத்துக்காக உடல் சுரக்கும் சுரப்புகள் நீர்த்துப் போய்விடும். அடுத்தது வயிற்றின் உஷ்ணம் குறைந்துவிடும். இவற்றினால் உட்கொண்ட உணவு ஜீரணமாகத் தாமதமாகும்.
ஜீரணமாகாத உணவு வயிற்றில் பழுதாகி நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக் கூடும். இந்த காரணங்களால் உணவை உட்கொள்ளும் போது தேவையில்லாமல் தண்ணீர் அருந்தக்கூடாது.