ஆரோக்கியம்

சைவம் உட்கொள்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறையுமா?

மாமிசங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகுமா?

மனிதர்களின் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் அவர்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து, அவர்களின் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்கிறது.

உயிர்ச்சத்து கிடைக்க இந்த உணவு, கொழுப்பு கிடைக்க இந்த உணவு, புரோட்டின் கிடைக்க இந்த உணவு, என்று எந்த உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை. உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ, உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை உட்கொண்டால்; உடலுக்கு என்ன தேவையோ அதை சுயமாக உடலே உற்பத்தி செய்து கொள்ளும்.

உடலுக்குத் தேவைப்பட்டால் காய்கறிகளில் இருந்து கூட கொழுப்பை உற்பத்தி செய்ய உடலால் முடியும். அதனால் வியாபார வலைகளிலும் அறியாமையிலும் சிக்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

நம்மை சுற்றி வாழும் விலங்கினங்களைப் பாருங்கள். சைவம் மட்டுமே உட்கொள்ளும் விலங்குகள் வெறும் புல்லில் இருந்தோ, இலையில் இருந்தோ, கொள்ளில் இருந்தோ, தவிட்டில் இருந்தோ, தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் உற்பத்தி செய்து கொள்ளும் போது. பழங்களிலும் காய்கறிகளில் இருந்து மனிதர்களின் உடல் அதற்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்து கொள்ள முடியாதா? சிந்தியுங்கள்!

X