ரெய்கியினால் வாழ்க்கையில் அடையக்கூடிய பயன்கள். முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, பயிற்சி செய்யும்போது குடும்பம், உறவுகள் மற்றும் சமுதாயத்தில் உண்டாகக்கூடிய மாற்றங்கள்.
1. இந்த உலகில் பிறப்பெடுத்ததன் நோக்கம் புரியத் தொடங்கும்.
2. கணவன் மனைவிக்கிடையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.
3. குடும்பத்தினர்கள் மத்தியில், மரியாதையும், அன்பும், உறவில் நெருக்கமும் அதிகரிக்கும்.
4. பிள்ளைகள் உடனான உறவில் பிணைப்பு பலமாகும்.
5. நண்பர்களுக்கிடையில் மரியாதை கிடைக்கும், முக்கியத்துவம் வழங்கப்படும்.
6. வாடிக்கையாளர்கள் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்வார்கள்.
7. சமுதாயத்தில் மதிக்கப்படுவார், முக்கியத்துவம் வழங்கப்படும்.
8. விலங்குகளுடனும், தாவரங்களுடனும் நெருக்கம் உண்டாகும்.
9. இந்த பூமியில் நடந்துக் கொண்டிருக்கும் விசயங்களும், நடக்கப்போகும் விசயங்களும் மறைமுகமாக உணர்த்தப்படும்.
10. ஆழ்மன மற்றும் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும்.