ரெய்கி

ரெய்கியின் சிறப்புகள் என்ன?

ரெய்கியின் சிறப்புகள் என்ன? ரெய்கி எந்த ஒரு நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாத எளிய கலையாகும். இந்த கலையில் சிறப்புகளில் சில:

1. ரெய்கியை கற்றுக்கொண்டு, பயிற்சி செய்ய எந்த தகுதியும் முன்னனுபவமும் தேவையில்லை.

2. ரெய்கியில் எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. விருப்பமுள்ள எவரும் கற்றுக் கொள்ளலாம்.

3. ரெய்கியை பயிற்சி செய்பவர்கள் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், மற்ற மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், ரெய்கியை பயன்படுத்தி உதவலாம்.

4. ரெய்கியை பயன்படுத்தி உடல், மனம், ஆற்றல், குடும்பம், சமுதாயம், என அனைத்து நிலைகளிலும் இடைஞ்சல்களை நீக்கிக் கொள்ளலாம். உடல் மற்றும் மனதின் ஆற்றலை அதிகரிக்கலாம்.

5. வாழ்க்கையின் தரமும், நிம்மதியும், மகிழ்ச்சியும், பொருளாதாரமும் மேம்படும்.

6. குடும்பத்தாருடனும், சக மனிதர்களுடனும், உறவுகள் சுமுகமாக அமையும்.

7. இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் உறவும் புரிதலும் உண்டாகும்.

8. ஆரா தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கும். சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் சுத்தமாகும்.

9. தீய சக்திகளும் செய்வினைகளும் எளிதில் நெருங்க முடியாது.

10. பிரச்சனைகளிலிருந்து வெளிவரவும், வாழ்க்கையில் முன்னேறவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் உறுதுணையாக இருக்கும்.

11. அக்குபஞ்சர், அக்குபிரசர், மற்றும் இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்கள், அவர்களின் சிகிச்சை முறைகளுடன் ரெய்கியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X