ரெய்கி தீட்சை வழங்கும் வழிமுறைகள். ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான செயலாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற விசயங்களின் இடையூறுகள் இல்லாமலும் இருப்பது அவசியம். முடிந்தால் தீட்சை வழங்கும் செயலை கடற்கரை, நதிக்கரை, தோட்டம், புல்வெளி, காடு, மலை போன்ற அமைதியான இடங்களில் செய்வது சிறப்பு.
மாஸ்டரும் மாணவரும், அமைதியாகவும் மன ஓர்மையுடனும் இருத்தல் வேண்டும். உடலாலும், மனதாலும், சக்தி நிலையிலும் சமதன்மை உண்டாக வேண்டும். அப்போதுதான் ஆற்றல் பரிமாற்றம் முழுமையாகவும் நிறைவாகவும் நடைபெறும். அதன் மூலம் அந்த மாணவர் அவருக்குத் தேவையான நன்மைகளை பெறுவார்.
ரெய்கி தீட்சை வழங்கும் மற்றும் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள்
ரெய்கி தீட்சையை பெற்றுக்கொள்ளும் மாணவரும், தீட்சையை வழங்கும் மாஸ்டரும் 20 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு.
1. மாஸ்டருக்கு மனதளவில், தீட்சை வழங்கும் நோக்கம் இருக்க வேண்டும்.
2. மாணவருக்கு மனதளவில், தீட்சை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்.
3. மாஸ்டர் மாணவரின் ஆராவை தூய்மை படுத்த வேண்டும்.
4. மாஸ்டர் மாணவரின் சக்ராக்களை தூய்மை படுத்த வேண்டும்.
5. மாஸ்டர் மாணவரின் ஆற்றலை சமப்படுத்த வேண்டும்.
6. மாஸ்டர் முதல் 5 சக்ராக்களை சீர்செய்து, சக்ராக்களுக்கு ஆற்றலை வழங்க வேண்டும்.
7. மாஸ்டர் தன் ரெய்கி ஆற்றலை மாணவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
8. மாணவருக்கு பிரபஞ்ச ஆற்றலுடன் தொடர்பை உண்டாக்க வேண்டும்.
9. தேவைப்பட்டால், மாணவருக்கு ரெய்கி சிம்பல் தீட்சை வழங்க வேண்டும்.
10. தீட்சை முழுமை பெற்றது.
ரெய்கி மாஸ்டர் தீட்சை
முதல் மூன்று தீட்சைகளையும் பெற்று அவற்றை முறையாக பயிற்சி செய்துவரும் மாணவர்களுக்கு மட்டுமே ரெய்கி மாஸ்டர் தீட்சை வழங்கப்பட வேண்டும். ரெய்கி மாஸ்டர் தீட்சையின் போது புதிய மாணவர்களுக்கு முதல் மூன்று கட்ட தீட்சை வழங்கும் அளவுக்கு பயிற்சியும், அறிவும், ஆற்றலும் வழங்கப்படும்.