Online Tamil Acupuncture Class. 1st Video introduction for Reiki.
ரெய்கி பயிற்சி அறிமுகம்
வணக்கம்,
ரெய்கி எனும் அற்புத கலையை அறிந்து கொள்ள விருப்பம் கொண்ட அனைவருக்கும் இந்த வகுப்பு பயனுள்ளதாக அமையும். இந்த வகுப்பை பயன்படுத்தி முழுமையாகவும் ஆழமாகவும் ரெய்கியை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் இந்த கலையை வாழ்க்கையில் பயன்படுத்த எண்ணும் போது அல்லது இந்த கலையிலிருந்து முழுமையான நன்மைகளை பெற வேண்டும் என்று எண்ணும் போது முறையாக பயிற்சி பெற்ற ஒரு ரெய்கி மாஸ்டரிடம் இருந்து தீட்சை பெற்ற பின்பு இந்த பயிற்சிகளை செய்வது சிறப்பாகும்.
இந்த வகுப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்கள் மீண்டும் ஆரோக்கியம் பெறவும், மன நிம்மதியை பாதுகாக்கவும், ஓராவிலும் (Aura), உடலின் சக்கரங்களிலும் (Chakra) படிந்திருக்கும் கெட்ட சக்திகளை தூய்மை படுத்தவும், அவற்றிற்கு சக்தியளிக்கவும் உதவும். குடும்ப உறவுகள் மற்றும் பொருளாதார நிலைகளை, மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.