ரெய்கி

ரெய்கி சிகிச்சை

ரெய்கி சிகிச்சை, ரெய்கி என்ற சொல் ஜப்பானிய மொழியில் உள்ள இரண்டு சொற்களின் கலவையாகும் “ரெய்” என்றால் பிரபஞ்சம் “கி” என்றால் ஆற்றல் ஆக ரெய்கி என்றால் பிரபஞ்ச ஆற்றல் என்று பொருள்படும்படியாக அமைந்துள்ளது.

ரெய்கி சிகிச்சை என்றால் பிரபஞ்ச ஆற்றலைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும்.இப்பிரபஞ்சத்தின் இயக்கத்திற்குக் காரணப் பொருளாக இருக்கும் பிரபஞ்ச ஆற்றலை, தெய்வீக ஆற்றல், இறையாற்றல், கி எனர்ஜி, சி எனர்ஜி, புனித ஆற்றல், அருட்பேராற்றல் இப்படியாகப் பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறது.

மின்சாரத்தைப் பிரபஞ்ச ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் எப்படி என்றால் மின்சாரம் எந்தப் பொருளுடன் சென்று சேருகிறதோ அங்கு அப்பொருளின் இயக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது. அது போல் பிரபஞ்ச ஆற்றலும் அனைத்திலும் இருந்து இயக்கப் பொருளாக தன்னை உட்படுத்திக் கொள்கிறது. பிரபஞ்ச ஆற்றலை ரெய்கி கலையை கற்ற ஹீலர் தனக்குள் உள்வாங்கி மற்றவர்களின் நலனுக்காகப் பிரயோகப்படுத்தும் முறையே அல்லது கலையே ரெய்கி சிகிச்சை எனப்படும்.

ரெய்கியை உடல் நலம் மட்டுமல்லாது, குடும்ப உறவுகள் சீர்செய்ய, பொருளாதார மேம்பாடு, தொழில் முன்னேற்றம், குழந்தைகள் நலம், குடும்ப உறுப்பினர்களின் குணநல மேம்பாடு போன்ற அனைத்து இடங்களிலும் ரெய்கியை பயன்படுத்தி நம் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

அனைவரின் வாழ்க்கையிலும் ரெய்கி என்பது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆம் என் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைப் பதிய விரும்புகிறேன் ரெய்கிக்கு முன் என் வாழ்வில் நடக்கும் கஷ்டமான நிகழ்வுகளுக்குக் கேள்வியாக எனக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டம் என்ற கேள்வி வரும் ரெய்கிக்கு பின் வரும் கஷ்டத்திற்குக் காரணம் தெரிகிறது அதனால் ஒரு புரிதலும் உணர்தலும் உண்டாகி அனுபவமாக மாறுகிறது .அப்போது கஷ்டத்தின் ஆயுள் சில மணிகளே ஆக அனைவருக்கும் இக்கலையைப் பற்றிய தெளிவு ஏற்பட்டால் வாழ்க்கை வளமாகும்.

கௌரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X