ரெய்கியில் முழுமையான பயன்களைப் பெற மாணவர்களும் மாஸ்டர்களும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தீட்சை பெறுதல்
ரெய்கியை பயிற்சி செய்ய விரும்புபவர்கள், ஒரு ரெய்கி மாஸ்டரிடம் இருந்து முறையாகவும் முழுமையாகவும் தீட்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தியானம்
தினமும் தியானம் செய்தால் வேண்டும். குறைந்தது தினம் பத்து நிமிடங்கள், முடிந்தால் காலை மாலை என இரண்டு வேளைகளில் தலா பத்து நிமிடங்கள் தியானம் செய்வது சிறப்பு.
அறிந்துக் கொள்ளுதல்.
இந்த உலகம், அதன் படைப்புகள், அதன் உயிரினங்கள், என அனைத்தும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். மற்றும் மனித வாழ்க்கை என்றால் என்ன? அது எவ்வாறு அமையப் பட்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னை, உடல், மனம், அறிவு, ஆற்றல் என எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்றைவிட இன்றும், இன்றைவிட நாளையும் மேன்மை அடைய வேண்டும்.
சுயத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்.
தன்னை உணர்வதற்கும், பிறப்பின் நோக்கத்தை அறிந்து கொள்வதற்கும் முயற்சி செய்ய வேண்டும். தன்னை அறிதல் மட்டுமே இந்த உலகில் உண்மையான அறிவாகும்.
அனைவர் மீதும் அன்பு செலுத்துதல்.
அனைவர் மீதும், எந்தவிதப் பேதமும் பார்க்காமல் அன்பு செலுத்த வேண்டும். எதிரிகளை மன்னித்து விட வேண்டும்.
இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
எந்த கைமாறும் எதிர்பார்க்காமல் உதவி தேவைப்படுவோருக்கு, உங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும்.
புரிந்து கொள்ள வேண்டும்
சுயம், குடும்பம், உறவுகள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உலகம், இயற்கை என அனைத்தையும் நேசித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
Leave feedback about this