ரெய்கி எனும் அற்புதக் கலை. ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படவும், மனம் நிம்மதி பெறவும், ஆராவிலும் (Aura), உடலின் சக்ராக்களிலும் (Chakra) படிந்திருக்கும் தேவையற்ற அலைகளைத் தூய்மைப்படுத்தவும், சக்ராக்களுக்கு சக்தியளிக்கவும், உடலின் இயக்க சக்தியை அதிகரிக்கவும் உதவும் அற்புதக் கலையாகும். மேலும் குடும்ப உறவு, மனிதர்களுக்கு இடையிலான உறவு, மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்.
இந்த இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்து அவற்றிலுள்ள கருத்துக்களை புரிந்துக் கொள்ளுங்கள். இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவாருங்கள். ரெய்கி, ஆற்றல், அலை, சக்ராக்கள், மற்றும் ஹீலிங் தொடர்பான புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள். உடலிலும், மனதிலும், வாழ்க்கையிலும், உண்டாகும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வாருங்கள். இந்த கவனிப்பும், புரிதலும், மன ஓர்மையும், உங்கள் வாழ்க்கையை மேலும் மேன்மையடையச் செய்யும்.
இந்தக் கலையிலிருந்து முழுமையான பயனைப் பெற விரும்புபவர்கள், முறையாகப் பயிற்சி பெற்ற ஒரு ரெய்கி மாஸ்டரிடமிருந்து தீட்சை பெற்ற பிறகு, ரெய்கியை பயிற்சி செய்யத் தொடங்குவது சிறப்பாகும்.