ரெய்கி ஆற்றலை அனுப்பும் பயிற்சி. ரெய்கி ஆற்றலை ஒரு மனிதருக்கோ, விலங்குக்கோ, தாவரத்துக்கோ, இடத்துக்கோ எளிதாக அனுப்பலாம். மன அமைதியுடனும், மன ஓர்மையுடனும், உங்கள் கரங்களை அந்த மனிதர், விலங்கு, பொருள் அல்லது இடத்தின் மீது காட்டி (கைகளால் தொட்டும் செய்யலாம்) மனதுக்குள் ரெய்கி ஆற்றல் அவர் மீது பரவட்டும் என்று நினைத்தாலே போதும். நீங்கள் நினைத்த மாத்திரமே ரெய்கி ஆற்றல் உங்கள் உள்ளங்கைகளின் மூலமாக பரவத் தொடங்கிவிடும். அதை நீங்கள் உணரவும் முடியும்.
ஒரு குறிப்பிட்ட நோயோ, தொந்தரவோ, நோக்கமோ, தேவையோ இருந்தால். அந்த நோக்கத்தை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும். உங்கள் உள்ளங்கைகளை காட்டிக் கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது நடக்கும், அவ்வளவு எளிமையானது ரெய்கி. இரண்டு கரங்களையும் பயன்படுத்தலாம் அல்லது வலது கரத்தை மட்டுமே பயன்படுத்தலாம். ரெய்கி முத்திரைகளையும் (Reiki symbols) பயன்படுத்தலாம். தொட்டும் செய்யலாம், தொடாமலும் செய்யலாம்.
1. தினசரி வாழ்க்கையில் அடிக்கடி ரெய்கி ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.
2. உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் செடி, கோடி, மற்றும் மரங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.
3. நோய்வாய்ப் பட்டிருக்கும் வீட்டு அல்லது சாலையோர விலங்குகளுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்ப வேண்டும்.
4. கர்ப்பம் தரித்திருக்கும் விலங்குகளுடன் ஆற்றலைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
5. விபத்துகளில் பாதிப்படைந்த அல்லது ஊனமுற்ற விலங்குகளுடன் உங்கள் ஆற்றலைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
6. ஆபத்தில், அவசரத்தில், அல்லது ஆம்புலன்சில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றலைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
7. முதுமையுற்ற, ஏழ்மையில் இருக்கும் அல்லது இயலாமையில் இருக்கும் மனிதர்களுடன் உங்கள் ஆற்றல்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
8. கர்ப்பம் தரித்த தாய்மார்களுடன் ரெய்கி ஆற்றலைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
9. வீட்டுக்காக நீங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற உணவுப் பண்டங்களுக்கு ரெய்கி ஆற்றலை அனுப்புங்கள்.
10. காய்கறிகளோ, பழங்களோ, தானியங்களோ, வாங்கினால், வீடு திரும்பியதும் அவற்றின் மீது ரெய்கி ஆற்றலை அனுப்பினால் அவை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இதை முயற்சி செய்துபாருங்கள்.