ரெய்கி தீட்சைக்கு அறிமுகம். தீட்சை என்றால், ஒரு கலையை அல்லது வித்தையை அடுத்த நபருக்கு கற்றுத் தந்த குருவானவர், கற்றுக் கொண்டவர் அந்த கலையை தன் வாழ்க்கையில் முழுமையாக பயன்படுத்த வழங்கும் அனுமதி அல்லது ஆசீர்வாதம் என்று பொருள் கொள்ளலாம்.
ஹோலிஸ்டிக் ரெய்கி தீட்சை
ஹோலிஸ்டிக் ரெய்கியில் தீட்சை (Holistic Reiki Attunement) என்பது ஒரு மாஸ்டர் தனது மாணவருக்கு, அவரின் ஆராவையும், சக்ராக்களையும், குண்டலினி ஆற்றலையும், சீர்படுத்தி. பின் தனது ஆற்றலை அவருடன் பகிர்ந்துக் கொண்டு, ரெய்கியை பயிற்சி செய்ய வழங்கும் அனுமதியாகும்.
ஹோலிஸ்டிக் ரெய்கி தீட்சையின் போது மாஸ்டர், பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் பேராற்றலுடன் (கீ), தீட்சை பெறும் மாணவருக்கு தொடர்பை ஏற்படுத்துவார். அந்த ஆற்றல் மாணவரின் உடலுக்குள் நுழைந்து செயல்படத் தொடங்கும். தீட்சை பெற்ற மாணவரின் ஆற்றல், சக்ராக்கள், ஆரா, மனம், மற்றும் உடலை சீர்படுத்தத் தொடங்கும். பிரபஞ்ச ஆற்றல்களை கிரகிக்கும் மற்றும் பயன்படுத்தும் திறனும் அதிகரிக்கும்.
ரெய்கியில் தீட்சை (Attunement) பெற்ற மாணவரை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஒப்பிடலாம். தொலைக்காட்சியை அதற்குரிய அலைவரிசையுடன் சரியாக இணைக்கும் போது நமக்கு தேவையான ஒளிபரப்பை அது வழங்குவதைப் போன்று, முறையாக தீட்சை பெற்றவுடன் மாணவரின் ஆற்றல் பிரபஞ்சத்துடன் இணைந்து, அந்த மாணவருக்குத் தேவையான விசயங்களை தனக்குள் கிரகித்துக் கொள்கிறது.
Leave feedback about this