ரெய்கி

ரெய்கி தீட்சை பெற்ற பிறகு உண்டாகும் மாற்றங்கள்

ரெய்கி தீட்சை பெற்ற பிறகு உண்டாகும் மாற்றங்கள். ரெய்கி தீட்சை பெற்ற பிறகு, சிலருக்கு உடலில் ஒரு சில மாறுதல்கள் உண்டாகலாம். அனைவருக்கும் இவ்வாறான மாறுதல்கள் உருவாக வேண்டும் என்ற அவசியமில்லை, தனிநபர் உடலுக்கும், மனதுக்கும், ஆற்றலுக்கும், ஏற்ப ஒரு சிலருக்கு இவ்வாறான மாறுதல்கள் உண்டாகலாம். சிலருக்கு எந்த மாறுதலும் தொந்தரவும் இல்லாமலும் இருக்கலாம்.

  1. உடலில் உஷ்ணம் அதிகரிக்கலாம்.
  2. தோலில் உஷ்ணம், குளிர்ச்சி, அரிப்பு, உருவாகலாம்.
  3. காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் உருவாகலாம்.
  4. தலைச்சுற்றல் அல்லது தலைவலி உருவாகலாம்.
  5. மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு உருவாகலாம்.
  6. இரவில் தூக்கம் கொள்ளாமல் இருக்கலாம்.
  7. சளி, இருமல், உண்டாகலாம்.
  8. இன்னும் மற்ற சில தொந்தரவுகளும் உருவாகலாம்.

தீட்சை பெற்ற மாணவர்கள் மேலே குறிப்பிட்ட தொந்தரவுகளில், ஏதாவது ஒன்றையோ அல்லது சிலவற்றையோ அனுபவம் செய்யலாம். மேலே குறிப்பிட்ட தொந்தரவுகள் உண்டாக காரணமாக இருப்பது, உடலின் சக்தி நிலையில் உண்டாகும் மாற்றங்களே. உடல் தன் கழிவுகளை நீக்கும் போதும், தீய ஆற்றல்களை நீக்கும் போதும், சக்தி நிலையை சமப்படுத்தும் போதும், இவ்வாறான அறிகுறிகள் தோன்றலாம்.

மேலே குறிப்பிட்ட தொந்தரவுகள் உண்டானால், அச்சப்படவோ மருத்துவம் செய்யவோ தேவையில்லை. வேலைகளையும் உணவையும் குறைத்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. ஓரிரு நாட்களில் அனைத்து தொந்தரவுகளும் குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *