நமது ரெய்கி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் - 5

I appreciate all the great feedback and suggestions you have provided.
உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
அனைவருக்கும் வணக்கம். ரெய்கி வகுப்பில் சேர்வதற்கு வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு ,எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு மாதத்திற்கு முன்பு, ஐயாவின் யூடியூப் சேனலை பார்க்க தொடங்கினேன். அதன் மூலமாக வாட்ஸ்அப் குரூப் லிங்க் கிடைத்தது. அதன் மூலம் ஆன்லைனில் நடைபெறும் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு, நிறைய கேள்விக்கு கேள்விக்கான விடைகளை தெரிந்து கொண்டேன். பிரபஞ்சத்தின் உதவியால் நீக்கி வகுப்பில் சேர்ந்தேன். ரெய்கி என்பது என்ன என்பதன் அடிப்படையை தெரிந்து கொண்டேன. ரெய்கியை பயன்படுத்துவதற்கு கல்வியில் மிகப்பெரிய பட்டம் தேவையில்லை என்பதையும் புரிய வைத்தீர்கள். கண்களால் பார்க்க முடியாத புனிதமான தெய்வீக சக்தி என்னிடம் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். ரெய்கி தீட்சை பெற்ற பிறகு, என்னுடைய மனம், சிந்தனை ஓட்டம், என்னுடைய உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி அடைந்ததை என்னால் உணர முடிந்தது. என்னை நானே அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றேன். யாராக இருந்தாலும் கடவுளுடைய கொடுப்பினை இருந்தால் மட்டுமே ரெய்கி கற்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். இன்னும் உலக மக்கள் அனைவரும் ரெய்கி யை அறிந்து அதன் மூலம் பயனடைய வேண்டும். மிக்க நன்றி.

ராஜ ரீகா லூமின், தூத்துக்குடி
இறையருளால் வகுப்பு பயனுள்ளதாக இருந்தது..தீட்சைக்குப் பிறகு மன அமைதியையும் , உடல் இலகுவாக இருப்பதையும் உணர முடிந்தது…. மூல(இறை)சக்தியிடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.. இறைவனுக்கு நன்றி , வழிகாட்டிய குருவிற்கு நன்றி.

M.Nainar Mohamed, India
குரு வணக்கம், sir,வாழ்க வளமுடன், தங்கள் ரெய்கி வகுப்பு மற்றும் வாரந்திர கலந்துரையாடல் மூலம் என் எண்ணங்கள் மற்றும் உடல்நலம் மேம்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கலந்துரையாடல்கள் ஆன்மிகப் பாடமாக அமைகின்றன தங்களை அறிமுகப்படுத்திய இறை சக்திக்கு நன்றி.

– Shanmugapriya c, Paramakudi