நமது ரெய்கி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் - 2

I appreciate all the great feedback and suggestions you have provided.
உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

இந்த இரண்டு நாள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பல விஷயங்களை கற்றுக் கொண்டோம்.. விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை எங்களுக்கு அருளியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா…🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏🙏…
R. Balamurugan – Madurai
Online Reiki Course – Degree: 1 & 2 (15 & 16 Apr 2023)
வழக்கம் போல் வகுப்பு மிக மிக சிறப்பாக இருந்தது. பிரபஞ்ச சக்தியை எளிமையான முறையில் உணர முடிந்தது. இந்த அடிப்படை வகுப்பு எங்களை புதுப்பித்து கொள்ள உதவியாக இருந்தது. நன்றி வாழ்க வளமுடன்
D. Prabavathi – Coimbatore
Online Holistic Reiki – May 2022
என் குலதெய்வத்திற்க்கும், குருவிற்கும், இறை ஆற்றலுக்கும் என் கோடான கோடி நன்றிகள். வகுப்பில் வித்தியாசமான அனுபவம். ஆரம்ப வகுப்பு சரியாக கவனிக்க முடியவில்லை இடையூறுகள் ஏற்ப்பட்டது. ஆனால் சில நேரங்களில் வகுப்பை சரியாக கவனிக்கும்போது உடலில் கை, கால் மற்றும் முகம் உடல் முழுவதும் பிரபஞ்ச சக்தி மாறி மாறி இறங்கியது. அந்த தருணமே நான் முழுமையாக தீட்சை பெற்றேன். இவ்வாறும் தீட்சை பெறலாம் என்று நேற்றுதான் வகுப்பில்தான் கற்றுக்கொண்டேன். இன்னமும் நேற்று நடந்த வகுப்பை நினைக்கும் போதும் பிரபஞ்ச சக்தியை உணர முடிகிறது. குருவை பார்த்து கவனிக்க ஆரமித்தபோதே தீட்சை பெற்று விட்டேன். நன்றி குருவே நன்றி பிரபஞ்சமே.
R Dhivagar – Thanjavur
Online Holistic Reiki – May 2022
அனைவருக்கும் வணக்கம். ரெய்கி வகுப்பில் சேர்வதற்கு வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு ,எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு மாதத்திற்கு முன்பு, ஐயாவின் யூடியூப் சேனலை பார்க்க தொடங்கினேன். அதன் மூலமாக வாட்ஸ்அப் குரூப் லிங்க் கிடைத்தது. அதன் மூலம் ஆன்லைனில் நடைபெறும் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு, நிறைய கேள்விக்கு கேள்விக்கான விடைகளை தெரிந்து கொண்டேன். பிரபஞ்சத்தின் உதவியால் ரெய்கி வகுப்பில் சேர்ந்தேன். ரெய்கி என்பது என்ன என்பதன் அடிப்படையை தெரிந்து கொண்டேன. ரெய்கியை பயன்படுத்துவதற்கு கல்வியில் மிகப்பெரிய பட்டம் தேவையில்லை என்பதையும் புரிய வைத்தீர்கள்.கண்களால் பார்க்க முடியாத புனிதமான தெய்வீக சக்தி என்னிடம் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். ரெய்கி தீட்சை பெற்ற பிறகு, என்னுடைய மனம், சிந்தனை ஓட்டம், என்னுடைய உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி அடைந்ததை என்னால் உணர முடிந்தது. என்னை நானே அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றேன். யாராக இருந்தாலும் கடவுளுடைய கொடுப்பினை இருந்தால் மட்டுமே ரெய்கி கற்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். இன்னும் உலக மக்கள் அனைவரும் ரெய்கி யை அறிந்து அதன் மூலம் பயனடைய வேண்டும். மிக்க நன்றி.
ராஜ ரீகா லூமின், தூத்துக்குடி
Online Holistic Reiki – Jan 2022
இறையருளால் வகுப்பு பயனுள்ளதாக இருந்தது..தீட்சைக்குப் பிறகு மன அமைதியையும் , உடல் இலகுவாக இருப்பதையும் உணர முடிந்தது…. மூல(இறை)சக்தியிடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது போல் உணர்ந்தேன்.. இறைவனுக்கு நன்றி , வழிகாட்டிய குருவிற்கு நன்றி.
M.Nainar Mohamed, India
Online Holistic Reiki – Jan 2022
வகுப்பு எளிமையாகவும் இயல்பாகவும் புரிந்து கொள்ளும் படி இருந்து. தீட்சை பெற்ற பின் பிரபஞ்ச ஆற்றலின் நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். நன்றி. சந்தோஷம்
Prabavathi Madhanagopal – Coimbatore
Online Holistic Reiki – 9 & 10 Oct 2021
வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது மேலும் கருத்து பரிமாற்றம் பல புதிய தகவல்களை எனக்கு உணர்த்தியது. தீட்சை வழங்கும் போது நல்ல அதிர்வலைகளை உணர்ந்தேன். மிக்க நன்றி ஐயா சந்தோசம்.
Meenakshi Sundari R – Coimbatore
Online Holistic Reiki – 9 & 10 Oct 2021
As usual, your class was rocking sir… Have attended much class of yours each and every class were unique and have learned new things in each class and moving on with universal and your blessings… Thanks to u both
Visalam – Chennai
Online Holistic Reiki – 9 & 10 Oct 2021
ஆசிரியர் தினத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ராஜா ஐயா விற்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இன்று என் மனம் உடல் இரண்டும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறேன். ரெய்கி எனும் பொக்கிஷம் அனைவருக்கும் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன்
K. Manjula – Chennai
Sep 2021 – Reiki Course – Starter
வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது. மனதில் ஒருவித அமைதி நிலை ஏற்பட்டது.எப்படி நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பது தெரிந்தது. நீங்கள் எனக்கு கொடுத்த தீட்சை (பிரபஞ்ச சக்தியை) எவ்வாறு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மேலும் எப்படி மேம்படுத்துவது என்றும் உணர்ந்து கொண்டேன். மேலும் வகுப்பு மிகவும் இயல்பாக இருந்தது. நன்றி ஐயா சந்தோசம்
R.Meenakshi Sundari – Coimbatore
Sep 2021 – Reiki Course – Starter
It’s been a week, I have attended online reiki class, it was my first experience, I practiced reiki entire week on myself, for my post covid recovery, my energy levels improved to an extent. 2 days back, I gave reiki to my husband who was having ear pain, and to my surprise, I healed him, he started feeling comfortable and the pain eased out in 10mins and he slept very well, Thank you so so much for the class and the lesson. Really very happy!!
Krishnamayee Talluri – Neyveli
Online Reiki Class – 23 May 2021
I got healers as my friends and getting solutions for my problems from them bcz of your healing class. You are taking much effort to join all the healers together and making individual groups like Chennai healers.. really a wonderful effort. Very much happy and satisfied to get a mentor like you.Thank you so much.
Akhila.U.S – Chennai
Holistic Reiki Online – 10 Jul 2021
ஒரு புனர்ஜென்மம் மறு ஜனனம் எடுத்ததுபோல் எனது கணவர் வகுப்புக்கு பின்னர் உணர்கிறார் அவர் மற்ற அனைவரின் அனுபவங்களையும் கேட்டபின்னர் ஊக்கம் உற்சாகமாக உணருகிறார் இந்த அனுபவத்தை எங்களது குடும்பத்திற்கு ராஜா சார் மூலம் தந்த இறைவனுக்கு ஆத்மாத்தமான நன்றிகள் சுயநலமற்ற ஊக்கம் உற்சாகம் தரவல்ல தங்களது ஞான சேவைக்கு நன்றி சார் – Akila (wife)
Karthikeyan – Denmark
Online Reiki Class – 23 May 2021
I love the explanations about universe power. I gained a clear picture of life and the guidance of the universe. And I know there is more I need to explore. The knowledge I gained from the class is very very helpful. And what I love about this class is the knowledge and awareness given to all not only for those highly spiritual. I’m truly thankful to Raja Sir and the team for providing us with the knowledge. And I’m thankful for this opportunity to enhance my knowledge. God bless.
Rtusna – Klang, Malaysia
Online Reiki Class – 23 May 2021
அனைவருக்கும் வணக்கம்🙏🏻 முதலில் இந்த வகுப்பில் சேர வாய்ப்பளித்த என் குலத்தெய்வதிற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம் கொடுக்க நினைப்பது எப்படியாவது கொடுக்கம் என்பதிற்கினங்க ராஜா அய்யா அவர்களின் வாட்ஸ்அப் குரூப் கிடைத்தது. இதில் நான் ஆன்லைன் மூலம் நடைபெறும் வாரந்திர கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய விடைகள் பெற்றேன். அப்பொழுது ரெய்க்கி வகுப்பிற்கான செய்தி வந்தது. அதில் சேர பல தடைகள் வந்தாலும் அன்பு பிரபஞ்சத்தின் உதவியால் வகுப்பில் சேர்ந்தேன். நேற்று (23.05.21) நடந்த வகுப்பில் தீக்க்ஷை பெற்றேன். பல புதிய அனுபவங்களை பெற்றேன். இருந்தாலும் இன்னும் பல தேடல்கள் உள்ளன. வரும் வகுப்பில் ராஜா அய்யா அவர்களின் மூலம் பதிலும் அன்பு பிரபஞ்சத்தை நோக்கி என் வாழ்வின் பாதைக்கான சிறப்பான வழிகாட்டுதலும் கிடைக்கும் என நம்புகிறேன். அனுபவத்தை பகிர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙇🏼‍♀️
Sangeetha Saravanan – Dubai
Online Reiki Class – 23 May 2021
Sir explained to us simple techniques to use Reiki energy in our daily life so that we can protect ourselves and our family and gave us clarity about how this universal energy works. Thank you, sir .
Thriveni – Hoskote, Bangalore rural
Online Reiki Class – 23 May 2021