ரெய்கி

ரெய்கி ஆற்றலும் அதன் பயன்பாடும்

ரெய்கி ஆற்றலும் அதன் பயன்பாடும். ரெய்கி ஒரு புனிதமான ஆற்றலாகும், இந்த ஆற்றல் நன்மையான காரியங்களுக்காகப் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் இந்த ஆற்றலை நன்மையான காரியங்களுக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்துவாரே ஆனால், அவரின் ஆற்றல் மேலும் வலிமையைப் பெரும். விரைவாகவும் சிறப்பாகவும் இலகுவாகவும் செயல்படும். அவர் நினைத்த மாத்திரமே அவர் நினைத்த விசயங்கள் நடக்க தொடங்கிவிடும்.

சில மனிதர்கள் ரெய்கி ஆற்றலைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். பெண்களை கவர்வது, மக்களை ஏமாற்றுவது, செய்வினை செய்வது, பழிவாங்குவது, மனிதர்களை மயக்குவது, பேய் பிசாசு போன்றவற்றுடன் உறவாடுவது, மற்றும் மற்ற தவறான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆற்றலைப் பயன்படுத்த முயலலாம்.

ஒருவர் ரெய்கி ஆற்றலைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், அவரின் ரெய்கி ஆற்றல் குறையத் தொடங்கிவிடும், பலகீனமாகும். சில நாட்களில் இந்த புனித ஆற்றல் அவரை விட்டு விலகிச் சென்றுவிடும்.

இது இயற்கையின் விதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X