இரத்த அழுத்தம் உருவாக காரணம் என்ன? உடலின் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு உண்டாகி, இரத்தத்தை அதிகமாகவும் அவசரமாகவும் அந்த உறுப்புக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால். இருதயம் வேகமாக துடித்து இரத்தத்தை பாதிக்கப்பட்ட உறுப்புக்கு விரைவாக அனுப்பிவைக்கும். உடலின் ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாக்க இது மிகவும் முக்கியமான அவசரகால செயலாகும். இதில் என்ன தவறு இருக்கிறது?
இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது சில வேளைகளில் தலைசுற்றல் அல்லது கிறுகிறுப்பு உருவாகலாம். தலைசுற்றலோ தலைவலியோ உருவானால், சாப்பிடாமல் ஓய்வெடுக்க வேண்டுமே ஒழிய இரத்த அழுத்தத்தை தடுக்கக் கூடாது.
ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள், உடல் ஒருபோதும் தவறு செய்யாது. தவறு முழுவதையும் செய்வது மனிதர்கள் தான். மனிதர்கள் செய்த தவறுகளுக்கு பழி உடலின் மீது கூறப்படுகிறது. ஒருவருக்கு உடலில் இரத்த அழுத்தம் உயர்கிறது என்றால், அதற்கு பல முக்கியமான காரணங்கள் இருக்கும். உதாரணமாக…
- உடல் உழைப்பு அதிகமாக இருக்கலாம்.
- உடலில் சோர்வு அதிகமாக இருக்கலாம்.
- உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கலாம்.
- உடல் உறுப்புக்கள் நோய்வாய் பட்டிருக்கலாம்.
- குணப்படுத்த வேண்டிய பகுதிக்கு அதிக சத்துக்களை அனுப்பலாம்.
- உடலில் நோய்களை குணப்படுத்தும் வேலை நடக்கலாம்.
- உடலில் இயக்க சக்தி குறைவாக இருக்கலாம்.
- உடலில் சத்துக்கள் குறைவாக இருக்கலாம்.
இரத்த அழுத்தம் உருவாக இன்னும் பல்வேறு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு நம் உடலுக்கு நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உருவாகும் இரத்த அழுத்தத்தை நோய் என்றும். இதை (High BP) உயர் இரத்த அழுத்தம் என்றும் பெயரிட்டு நம்மை மேலும் மேலும் நோயாளிகளாக மாற்றுகிறார்கள். நாமும் அவர்களை நம்பி மாத்திரை மருந்துகள் என்ற பெயரில் இரசாயனங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.