பிரிவு கவிதை

பிரிவு

கண்ட துண்டமாக
வெட்டிவிடு
உயிருடன்
தீயிட்டுக்கொழுத்து

தோலை முழுதுமாக
உரித்துவிடு
இதயத்தை வேரோடு
பிடுங்கிவிடு

மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்வேன்
உனக்காக…

மறந்துவிடு
என்று மட்டும்
சொல்லாதே

அந்த வலியைத்
தாங்கும் சக்தி
என்னிடமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *