வாழ்க்கை

பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது எப்படி?

பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது எப்படி?

மனித வாழ்க்கை என்பதே ஆன்மாக்களுக்கான அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருப்பதனால் பிரச்சனைகளே இல்லாத மனித வாழ்க்கை என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அனுபவிக்க வேண்டிய அனுபவத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் உருவாகக் கூடும்.

ஆனால், பிரச்சினைகள் துன்பங்களை உண்டாக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. சரியாக சிந்தித்து செயல்பட்டால் அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சனைகளை தைரியமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவற்றின் மூலங்களையும், விளைவுகளையும் சிந்தித்து ஆராய வேண்டும். அத்தனை பிரச்சனைகளும் நமக்கு பாடமாக அமைவதனால், அவற்றை மனதுக்குள் சுமக்காமல் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு கிடைத்துவிடும், மற்றும் எந்த பிரச்சனையாலும் நமக்கு மன வேதனையை உருவாக்க முடியாது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X