பின்பற்றுவதால் உருவாகும் பாதிப்புகள். இந்த உலகில் எல்லா மனிதர்களும் இறைவன், தெய்வம், கடவுள், சாமி, இயற்கை, பிரபஞ்ச ஆற்றல், என்று பல்வேறு பெயர்களில், தன்னைவிட பெரிய ஆற்றல் ஒன்று இருப்பதாக நம்புவார்கள். பலர் அவற்றுக்கு பூஜை, மற்றும் வணக்க வழிபாடுகளைச் செய்வார்கள்.
இவ்வாறான ஆற்றல்கள் இருப்பது எவ்வாறு அவர்களுக்குத் தெரியும்? அவர்கள் தங்களின் சுய அனுபவங்களால் உணர்ந்து கொண்டார்களா? அதனை ஆராய்ந்து புரிந்து கொண்டார்களா? இரண்டுமே கிடையாது, அவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள் அவ்வளவுதான்.
பெற்றோர்களின் மீது கொண்ட நம்பிக்கை என்பதைத் தாண்டி அவர்களின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் வேறு காரணங்கள் இருக்க முடியாது. முதலில் நம்பிக்கை கொண்டு, நம்பிக்கை உருவான பிறகு அவ்வாறான ஆற்றலை ஆராய்ந்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.
இன்றைய கால கட்டத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் எத்தனை கொலைகள், கலவரங்கள் நடைபெறுகின்றன? அவ்வாறான கொலைகளையும் கலவரங்களையும் செய்பவர்களில் ஒருவராவது கடவுளை நேரில் பார்த்திருப்பார்களா? அல்லது கடவுளுடன் அவர்களுக்கு நேரிடை அனுபவங்கள் ஏதாவது இருக்குமா? எதுவுமே கிடையாது.
கலவரம் கொலை போன்றவற்றில் சிலர் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களின் நம்பிக்கை கண்மூடித் தனமான மூடநம்பிக்கையாக மாறிவிட்டது. உண்மை என்று இவர்கள் நம்பிக்கைக் கொண்டவற்றை மற்றவர்களும் நம்பவேண்டும் என்று வற்புறுத்துவார்கள், மற்றவர்கள் நம்பவில்லை என்றால் கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள்.
மனிதர்களின் நம்பிக்கை என்பது ஆக்கவும் அழிக்கவும் கூடிய மாபெரும் ஆற்றலாகும், அதனால் ஒரு விசயத்தைக் கற்றுக்கொள்ளும் போதும், தெரிந்துகொள்ளும் போதும், நம்பிக்கை கொள்ளும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Leave feedback about this