மனம்

பிளவுபட்ட ஆளுமை – ஸ்பிலிட் பெர்சனாலிட்டி

பிளவுபட்ட ஆளுமை – ஸ்பிலிட் பெர்சனாலிட்டி (Split personality disorder) என்று அழைக்கப்படும் ஒருவகையான மனக் குழப்பம் இன்று பலருக்கு சிறிய அளவில் இருக்கிறது. ஸ்பிலிட் பெர்சனாலிட்டி உள்ளவர்கள் அவர்களின் உண்மையான இயல்பை எல்லா இடத்திலும் எல்லா நபரிடமும் தக்கவைத்துக் கொள்ள முடியாது, ஒவ்வொரு இடத்துக்கும் நபருக்கும் நேரத்துக்கும் தக்கவாறு வெவ்வேறு வகையாக நடந்து கொள்வார்கள். ஒரு முறை பார்க்கும்போது அறிவாளி போலவும், அடுத்தமுறை முட்டாள் போலவும், ஒருமுறை கோபக்காரர் போலவும், அடுத்தமுறை அன்பானவர் போலவும், மாறி மாறி தன் குணத்தைக் காட்டுவார்கள்

வாழ்க்கையில் எதிர்பாராத கடுமையான ஏற்ற தாழ்வுகளை அனுபவம் செய்யும்போது மனம் இதைப்போன்ற பெர்சனாலிட்டிகளை உருவாக்கிக் கொள்கிறது. மனதில் பாதிப்புகள் உருவாகும் போதும், அதிர்ச்சி தரக்கூடிய இன்பத் துன்ப நிகழ்வுகள் நடைபெறும் போதும், பெர்சனாலிட்டிகள் உருவாகலாம். ஒரே மனிதருக்கு அவரை அறியாமலேயே பல்வேறு பெர்சனாலிட்டிகள் இருக்கலாம்.

உதாரணத்துக்கு, மனதில் அளவுக்கு அதிகமான அச்ச உணர்வு உள்ளவர்களுக்கு அவர்களை அறியாமலேயே கோவக்காரன் என்று ஒரு பெர்சனாலிட்டி (தன்மை) உருவாகிவிடுகிறது. அவர்களின் அச்ச உணர்வைப் பயன்படுத்தி யாரும் அவர்களுக்குத் தீங்கு செய்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால், கோவக்காரன் என்ற தோற்றத்தை அவர்களின் மனம் உருவாக்கிக் கொள்கிறது. நம்முடன் வாழும் மனிதர்களில் கோபக்காரர், கடுமையாகப் பேசுபவர், கண்டிப்பானவர், என்று நம்பப்படும் பலர் மனதளவில் தாழ்வு மனப்பான்மையும் அச்ச உணர்வும் உடையவர்களாக இருக்கிறார்கள்.

பெர்சனாலிட்டி டிஸார்டர் உள்ளவர்கள் பெரும்பாலும் அதனை உணர மாட்டார்கள். அவர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உடன் வசிப்பவர்களுக்கும் தான் அது தெரியும். பெர்சனாலிட்டி டிஸார்டர் உருவாகக் காரணமாக இருந்தவற்றைக் கண்டுபிடித்து, பாதிக்கப் பட்டவரின் மனதில் தைரியத்தையும், நம்பிக்கையையும், மன அமைதியையும், தரக்கூடிய நல்ல பதிவுகளை, நல்ல அனுபவங்களை உருவாக்கினால் இந்த மனப் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும். மருந்து மாத்திரைகள் நிரந்தரத் தீர்வைத் தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *