பேராற்றலுடன் தொடர்பைத் துண்டிக்கும் வழிமுறைகள். இந்த பிரபஞ்சப் பேரண்டத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலிடமிருந்து, சிறிது ஆற்றலை இரவல் வாங்கித்தான் ஹீலர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். தேவையான நபருக்கு சிகிச்சை அளித்து முடித்தவுடன் பேராற்றலுக்கு நன்றி கூறி, சிகிச்சையின் போது உண்டான தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தொடர்பானது கையடக்கத் தொலைப்பேசியை மின்சாரம் மூலமாக சார்ஜ் செய்வதைப் போன்றதாகும். சார்ஜ் செய்து முடித்தவுடன் மின்சார இணைப்பைத் துண்டிப்பதைப் போன்றது கிரௌண்டிங். ஆற்றலைத் துண்டிக்கும் வழிமுறைகள் (கிரவுண்டிங்).
1. பிரபஞ்சப் பேராற்றலுடனான தொடர்பு துண்டிக்கட்டும் என்று மனதளவில் நினைக்கும் (கட்டளையிடும்) போதே, அதன் தொடர்பு துண்டித்துவிடும்.
2. இரண்டு கரங்களையும் தேய்த்துக்கொண்டு, பிரபஞ்சப் பேராற்றலுடனான தொடர்பு துண்டிக்கட்டும் என்று மனதளவில் நினைக்கும் (கட்டளையிடும்) போதும், அதன் தொடர்பு துண்டித்துவிடும்.
3. ஓடும் தண்ணீரில் கைகளைக் கழுவிக்கொண்டு, அல்லது கல்லுப்பு கலந்த தண்ணீரில் கைகளைக் கழுவிக்கொண்டு, பிரபஞ்சப் பேராற்றலுடனான தொடர்பு துண்டிக்கட்டும் என்று மனதளவில் நினைக்கும் (கட்டளையிடும்) போதும், அதன் தொடர்பு துண்டித்துவிடும்.
4. அல்லது வீட்டுக்கு வெளியில் மண்ணில் கால்களில் செருப்பில்லாமல் நின்றுகொண்டு, பிரபஞ்சப் பேராற்றலுடனான தொடர்பு துண்டிக்கட்டும் என்று மனதளவில் நினைக்கும் (கட்டளையிடும்) போதும், அதன் தொடர்பு துண்டித்துவிடும்.
Leave feedback about this