woman smiling holding man's arms
தாம்பத்தியம்

பெண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள்

#image_title

பெண்களுக்கு சில தாம்பத்தியக் குறிப்புகள்.

1. கணவனுடன் உடலுறவில் ஒத்துழையுங்கள், இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டாகும். இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இருவருக்கும் முழுமையான இன்பம் கிட்டும்.

2. கணவனின் மனம் அறிந்து நடந்து கொள்ளுங்கள். அவன் வேலைக்கும், வெளியிடங்களுக்கும் சென்று வருவதால், அவன் மனம் எப்பொழுதும் ஒரே சமநிலையில் இருக்காது.

3. கணவனின் ஆசைகளை நிறைவேற்றுவதே உங்களின் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுங்கள். அதற்காக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். விருப்பம் இல்லாதவற்றைச் செய்யாதீர்கள்.

4. உடலுறவில் ஈடுபடும் பொழுது உங்கள் உணர்வுகளையும் தேவைகளையும் அறிகுறிகள் மூலமோ, ஓசைகள் மூலமோ கணவனுக்கு உணர்த்துங்கள்.

5. சுத்தமாக, அழகாக அலங்காரம் செய்யும் மனைவியைத்தான் கணவன்களுக்கு அதிகம் பிடிக்கும். முடிந்தவரையில் சுத்தமாகவும், அழகாகவும் இருங்கள்.

6. உங்களுக்கு ஆசை அல்லது உணர்வு உண்டானால் கணவனிடம் தயங்காமல் குறிப்பின் மூலம் உணர்த்துங்கள். ஆசையை அடக்காதீர்கள்.

7. உடலுறவின் போது கூச்சத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

8. சாப்பிடும்போதும், கட்டிலிலும் தேவையில்லாத விசயங்களைப் பேசாதீர்கள்.

9. கணவனை மகிழ்ச்சிப்படுத்த உங்களால் இயன்றவற்றை எல்லாம் செய்யுங்கள்.

10. உங்களுக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் மறைமுகமாக கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *