பரபரப்புக்கும் இரைச்சலுக்கும்
மத்தியில் சிறு மௌனம்
தாமரை இதழோடு
பேசிய வசனங்கள்
பத்து நொடிதான்
பத்து நொடிகளில்
பத்து ஜென்மங்கள்
வாழ்ந்துவிட்டேன்
எந்த வண்டும்
எந்த மலரிலும்
கண்டிராத மென்மை
கொண்டிராத இனிமை
குளுமை உஷ்ணம்
இரண்டும் கலந்த
மூன்றாவது உணர்வு
விளக்கத் தெரியவில்லை
அந்த நினைவுகள்
அந்த நிமிடங்கள்
அந்த உணர்வுகள்
ஆறாவது விரலாக