பசுவின் பாலும் உணவுமுறையும். பசு மற்றும் காளைகள் வீட்டு விலங்குகளாகவும், விவசாயத்தில் உதவியாகவும் நெடுங்காலமாக இந்தியர்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றன. அதன் காரணமாக மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய வாழ்க்கை முறையிலும் கலாச்சாரத்திலும் பால் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. அத்தனை மகிழ்ச்சியான மற்றும் வருத்தமான நிகழ்வுகளிலும், மேலும் உணவாகவும் பால் பயன்படுத்தப் படுகிறது.
பால் உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு மாயை மனிதர்களுக்கிடையில் உள்ளது. குறிப்பாக வளரும் குழந்தைகள் பால் அருந்தினால் நல்லது என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். பால் ஏன் அருந்துகிறீர்கள் என்று கேட்டால் பாலில் அதிக கால்சியம் இருக்கிறது என்று கூறுவார்கள். சரி மனிதர்கள் பால் அருந்தினால் கால்சியம் கிடைக்கும் என்று கூறும் மருத்துவர்கள், பசு மாட்டுக்கு எவ்வாறு கால்சியம் கிடைத்தது என்று ஏன் சிந்திக்கவில்லை?
ஒரு மாடு எத்தனை கிலோ எடை இருக்கும்? ஒரு மாடு எவ்வளவு வேகமாக வளரும்? மாடு எவ்வளவு வேலைகளைச் செய்யும்? மாடு எவ்வளவு சுமைகளைச் சுமக்கும்? இவ்வளவு உழைப்புக்காகத் தான் மாட்டின் பாலில் அதிகமான கால்சியம் இருக்கிறது. மனிதர்களுக்கு மாட்டின் அளவுக்கு உருவமும் இல்லை, உழைப்பும் இல்லை அப்புறம் எதற்கு மாட்டின் அளவுக்கு கால்சியம்?
சரி! ஒரு ஐந்தறிவு ஜீவனான பசுவின் உடலால் அதிகமான கால்சியத்தை உற்பத்தி செய்ய முடியும் போது ஆறறிவு ஜீவனான மனிதனின் உடலால் அந்த உடலுக்குத் தேவையான கால்சியத்தை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாதா? சற்று சிந்தியுங்கள். ஒரு விலங்கால் செய்ய முடிந்த வேலையை மனிதனால் செய்ய முடியாதா? பசும்பாலை மனிதர்கள் பயன்படுத்துவதற்காக இயற்கை வழங்கவில்லை, பசுவின் கன்று அருந்துவதற்காகத் தான் பசும்பால் படைக்கப் பட்டிருக்கிறது.
பசும்பாலை இரண்டாம் கட்ட உணவாக பயன்படுத்தலாமே ஒழிய நேரடி உணவாக பயன்படுத்துவது ஆரோக்கியமில்லை. சமைத்த உணவை உட்கொள்ளாத சிறு குழந்தைகளும் முதியவர்களும் மற்றும் நோயாளிகளும் மட்டுமே பசும்பாலை அருந்தலாம். மற்றவர்கள் பசும்பாலை அருந்தினால் அது ஜீரணமாக வெகுநேரம் ஆகும். வயிறும் உடலும் மந்தமாகும், நாளடைவில் உடலின் ஜீரணத் திறன் பழுதடைந்து பல நோய்கள் உருவாக கூடும்.
Leave feedback about this