வாழ்க்கை

குடும்ப அல்லது பரம்பரை சாபம் என்றால் என்ன?

man sitting on bench

குடும்ப அல்லது பரம்பரை சாபம் என்றால் என்ன? உங்களில் சிலர் ஒரே குடும்பத்தில் பல ஊனமுற்ற குழந்தைகளை பார்த்திருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தில் பலரும் நோயாளிகளாக இருப்பதை பார்த்திருக்கலாம், அல்லது எவ்வளவு முயன்றும் முன்னேற முடியாத குடும்பத்தை பார்த்திருக்கலாம்.

ஒரே பரம்பரையில் ஆண் வாரிசுகள் மட்டும் உடல் வளர்ச்சியோ மன வளர்ச்சியோ இல்லாமல் பிறந்திருப்பதை பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். ஒரே குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் பல கொடிய பாவங்களை செய்யும் போது அந்த குடும்பத்தில் ஊனமாக வாழ வேண்டிய குழந்தைகள் பிறப்பார்கள். இதைத்தான் பரம்பரை சாபம் என்று சொல்வது.

மனிதர்களை கொலை செய்தவர்களுக்கும், ஊனமாக்கியவர்களுக்கும், அதிக வட்டி வாங்கி மக்களை கொடுமைப் படுத்துபவர்களுக்கும், ஊனமுற்றவர்களையும் ஏழைகளையும் கொடுமைப் படுத்தியவர்களுக்கும், ஏளனம் செய்தவர்களுக்கும், உதாசீனப் படுத்தியவர்களுக்கும், துன்பம் என்றால் என்ன? வலி என்றால் என்ன? ஊனம் என்றால் என்ன? உடல் ஊனமாக இருப்பவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் என்ன? என்பனவற்றை புரியவைப்பதற்காக; எங்கோ ஊனமாக பிறக்க வேண்டிய நபர்கள் இந்த குடும்பத்தில் வந்து பிறப்பார்கள்.

இவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் திருந்தி நல்வழி பெற்று பாவமன்னிப்பு தேடும் வரையில் இந்த தண்டனை பரம்பரை பரம்பரையாக தொடரும். திருந்தவில்லை என்றால் படிப்படியாக இவர்களின் வம்சமே அழிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *