பரம்பரை நோய்கள் என்பவை என்ன? பரம்பரை நோய்கள் என்பவை, தாய் தகப்பனிடம் இருந்தோ, தாத்தா பாட்டியிடம் இருந்தோ, அல்லது பாட்டன் பூட்டியிடம் இருந்தோ, அடுத்த தலைமுறைக்குப் பரவும் நோய்கள் என்று நம்பப்படுகிறது. குணப்படுத்த முடியாத நோய்களையும், எவ்வாறு உருவாகிறது என்ற காரணம் தெரியாத நோய்களையும், மற்றும் ஒரே குடும்பத்தில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இருக்கும் நோய்களையும், பரம்பரை நோய்கள் என்று குறிப்பிடுவார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் பரம்பரை நோய்கள் என்று எதுவுமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் உருவாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.
இயற்கையின் அமைப்பைப் பொறுத்தமட்டில், பெற்றோர்களும் பிள்ளைகளும் தனித் தனி உயிரினங்கள். அவர்களின் வாழ்க்கையும் வெவ்வேறு நோக்கத்தைக் கொண்டதாக இருக்கும்; அதனால் அவர்களின் உடல், மனம், மற்றும் ஆற்றலின் அமைப்பும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். அதனால் பெற்றோருக்கு இருக்கும் நோய்கள் பிள்ளைகளுக்கும் நிச்சயமாக வரவேண்டிய தேவைக் கிடையாது.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான நோய்கள் இருப்பதன் காரணம் என்ன?
ஒரு குடும்பத்தைச் சார்ந்த அத்தனை உறுப்பினர்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உணவு முறைகளையும், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைகளையும் கொண்டிருப்பார்கள். அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரியாக இருப்பதால்தான், அவர்களுக்கு உண்டாக்கக் கூடிய நோய்களும் ஒரே தன்மையுடையவையாக இருக்கின்றன.
முறையான உணவு முறையும், வாழ்க்கை முறையும் கொண்ட பிள்ளைகளுக்கு, அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எந்த நோயும் அண்டுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.