பணம் செய்ய விரும்பு. இன்றைய காலகட்டத்தில் பணம் அனைவருக்கும் இன்றியமையாத தேவையாகும். ஒரு காலத்தில் பண்டமாற்று முறைக்கு மாற்றாக தங்கமும் வெள்ளியும் பரிவர்த்தனை பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் பணம் தான் உலகின் பரிவர்த்தனை பொருள்.
இந்த உலக வாழ்க்கைக்கு செல்வம் எவ்வளவு அவசியமானது என்பதை திருவள்ளுவர் கீழ்க்கண்ட குறளில் உணர்த்துகிறார்.
வாழ்க்கையில் உண்டான தடைகள், தடங்கல்கள், தோல்விகள், ஏற்றத்தாழ்வுகள், என்று பல்வேறு காரணங்களால் பணம் சேர்க்கும் ஆசை பலருக்கு இல்லாமல் போகலாம். சிலருக்கு, பணம் ஒரு தீமையின் குறியீடு, செல்வந்தர்கள் அனைவரும் கெட்டவர்கள், தீயவழியில்தான் பணம் சேர்த்திருப்பார்கள், என்பன போன்ற பல்வேறு விசயங்களை இளம் வயதிலேயே கேள்விப்பட்டதால் சிலருக்கு பணத்தின் மீது நாட்டம் இல்லாமல் போகலாம்.
கடுமையாக வேலை செய்கிறோம், உழைக்கிறோம், வியாபாரம் செய்கிறோம், இவை அனைத்தும் பணத்துக்காக தானே? மனதில் பதிந்திருக்கும் தவறான பதிவுகளின் காரணமாக, உழைக்க, பாடுபட, முயற்சி செய்யத் தெரிந்த அளவுக்கு பணம் சேர்க்க அனைவருக்கும் தெரிவதில்லை.
தற்போதைய உலகில் பணம் தான் முக்கியம், அதனால் சம்பாதிக்கும் பணத்தை சரியாகச் சேமிக்க வேண்டும், முதலீடு செய்து அந்த செல்வத்தைப் பெருக்க வேண்டும், என்ற எண்ணம் பெரும்பாலும் உண்டாவதில்லை. உழைக்கத் தெரிந்தவர்களுக்கு பணம் செய்யத் தெரிவதில்லை. பணம் சம்பாதிக்கத் தெரிந்தவர்களுக்கு அதை சேர்க்கத் தெரிவதில்லை. பணத்தைச் சேர்க்கத் தெரிந்தவர்களுக்கு அதனை அனுபவிக்கத் தெரிவதில்லை.
பணம் சம்பாதிக்கவும் அதனைச் சேர்த்து வைக்கவும் முதலீடு செய்யவும், சேர்த்த பணத்தைப் பெருக்கவும், அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் பணத்தின் அருமையைப் புரிந்து கொண்டு, வீண் விரயம் செய்யாமல் அதனைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும், முதலீடு செய்து அந்த பணத்தைப் பெருக்கும் ஆர்வமும் உண்டாகும்.
Leave feedback about this