ஆரோக்கியம்

பாக்கெட் பால் மனிதனுக்கு மிகவும் கெடுதியானது

பாக்கெட் பால் மனிதனுக்கு மிகவும் கெடுதியானது. இன்றைய மனிதர்கள் குறிப்பாக இந்தியர்கள், உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் மிகவும் கெடுதியானது பாக்கெட்டில் விற்கப்படும் பால் தான். அவர்கள் உட்கொள்வது மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். அதனை விலங்குகளுக்குக் கூட கொடுக்கக்கூடாது அந்த அளவுக்கு கெடுதியானது பாக்கெட் பால்.

இந்தியாவுக்குச் சென்றிருந்த போது கவனித்தேன், அங்கு எந்த நிறுவனத்தின் பால் பாக்கெட்டிலும், பசும்பால், மாட்டுப்பால், கறவைப் பால், பசு, மாடு, போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. (Ingredients) என்ற பாலில் கலக்கப்பட்ட பொருட்களின் விவரங்களைப் பார்த்தால் கூட அதில் பசும்பால் என்ற வார்த்தை கிடையாது. அவ்வளவு ஏன் பசு மாட்டின் படத்தைக் கூட பால் பாக்கெட்டில் பயன்படுத்துவது கிடையாது.

தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் விளம்பரங்களில் கூட நான் கவனித்தேன். அவர்கள் பசு, மாடு, பசும்பால் என்ற வார்த்தைகளை உச்சரிப்பது கிடையாது. இவை அனைத்துமே, நீங்கள் அருந்துவது பசும்பால் அல்ல என்ற மறைமுகமான அறிவிப்பாகும். இவை சட்டரீதியாக எந்த சிக்கலும் உண்டாக கூடாது என்ற அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

பாக்கெட் பாலில் உள்ளது என்ன?

பெரும்பான்மையான பாக்கெட் பாலில் கலக்கப்படுபவை, தண்ணீர், கொஞ்சம் பசும்பால், அதுவும் அந்த பால் கெட்டுப்போக கூடாது என்பதற்காக இயற்கையாக பாலில் இருக்கும் உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களை நீக்கிவிட்டு அதில் இரசாயனம் கலந்து பதப்படுத்துகிறார்கள். செலவுகளைக் குறைப்பதற்காகவும், லாபத்தை அதிகரிப்பதற்காகவும் அதில் செயற்கை பால் பவுடர், மைதா, பல வகையான இரசாயனங்கள், மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலுக்கு ஒவ்வாத சத்துப் பொருட்களையும் கலக்கிறார்கள்.

பாக்கெட் பால் உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

ஒரு வயதான பெண்மணியுடன் பாக்கெட் பாலின் தீங்கைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறினார், தூய பசும்பால் தண்ணியாக நீர்த்துப் போயிருக்கும் பாக்கெட் பால் தான் நல்லா கெட்டியாக இருக்கும் அதனால்தான் பாக்கெட் பால் வாங்குகிறேன் என்று. அவர் விரும்புவதைப் போன்று கொடுத்தால் எதை வேண்டுமானாலும் அருந்த அவர் தயாராக இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் நாக்கின் சுவையே முக்கியம் என்று அவரை போன்ற பலர் எண்ணுகிறார்கள்.

பாக்கெட் பாலை அருந்தினால் அந்த நோய் உருவாகும் இந்த நோய் உருவாகும் என்று பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் பாக்கெட் பால் மிக மோசமான மிகக் கெடுதியான பல நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. பாக்கெட் பால் பயன்படுத்துவதை இன்றே நிறுத்துங்கள், நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக வாழுங்கள்.

பால் பற்றிய சில குறிப்புகள்

1. பசும்பால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்பது வெறும் மாயை மட்டுமே, அதில் உண்மை இல்லை. பாலை ஜீரணித்து சக்தியாக மாற்றக்கூடிய தன்மை பலரின் வயிற்றுக்கு இருப்பதில்லை. அதனால் பாலை அவசர நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.

2. செரிமானக் கோளாறு, வயிறு மந்தம் மற்றும் உடலில் தொந்தரவு உள்ளவர்கள் பால் அருந்துவதை உடனே நிறுத்துங்கள்.

3. பிறந்த குழந்தைகளுக்கு நான்கு வயது வரையில் தாய்ப்பாலை மட்டுமே கொடுங்கள். தாய்ப்பால் எனக்கு ஊறவில்லை என்று கூறும் தாய்மார்கள், எல்லா வகையான இரசாயன மருந்துகளையும் நிறுத்துங்கள் நிச்சயம் தாய்ப்பால் ஊறும்.

4. பால் கிடைக்காத நான்கு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, நாட்டுக் கறவை மாட்டின் பாலில் ஒன்றுக்கு நான்கு மடங்கு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

5. பசு மாட்டை வளர்ப்பவர்களிடம் இருந்து கறந்த பால் வாங்கி பயன்படுத்துங்கள். அவர்கள் அதிகமாகப் போனாலும் தண்ணீரை மட்டும் தான் கலப்பார்கள்.

6. பசு வளர்ப்பவர்களிடம் பால் வாங்கி அதில் ஒன்றுக்கு நான்கு என்ற விகிதத்தில் தண்ணீரை கலந்து உபயோகியுங்கள்.

7. சிறுவர்களும் முதியவர்களுக்கு ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து பயன்படுத்துங்கள்.

8. பாக்கெட்டில் விற்பனையாகும் எந்த நிறுவனத்தின் பாலையும் அருந்த வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *