மருத்துவம்

பாத பிரதிபலிப்பியல் சிகிச்சை

physical therapy, foot massage, massage

பாத பிரதிபலிப்பியல் சிகிச்சை என்பது என்ன?

பாத பிரதிபலிப்பியல் சிகிச்சை (foot reflexology) என்பது கால் பாதங்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலமாக உடலில் இருக்கும் தொந்தரவுகளைக் களைவது.

மனித உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் இணைப்பு புள்ளிகள் அவரவர் பாதங்களில் உள்ளன. கால் பாதங்களில் அமைந்திருக்கும் இந்தப் புள்ளிகள், உடலில் இருக்கும் தொந்தரவுகளைக் குறிப்புக் காட்டவும், அவற்றைக் குணப்படுத்தவும் உதவும்.

எவ்வாறு பாதச் சிகிச்சை வழங்கப்படுகிறது

கால் பாதங்களில் அமைந்திருக்கும் பிரதிபலிப்பு புள்ளிகளுக்கு கை விரல்களைக் கொண்டும், இந்தச் சிகிச்சைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டைகளைக் கொண்டும் சிகிச்சை வழங்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மட்டும் சிகிச்சை வழங்காமல் இரு கால்களிலும் அமைந்திருக்கும் அத்தனை புள்ளிகளுக்கும் அதன் வரிசைப்படி முறையாக சிகிச்சை வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

சரியாகவும் முறையாகவும் சிகிச்சை வழங்குவதன் (அழுத்தம் கொடுப்பதன்) மூலமாக உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்தி ஓட்டமும், ரத்த ஓட்டமும், காற்றோட்டமும், நிணநீர் ஓட்டமும் சீராகும். அவற்றில் ஏதேனும் தடைகள் இருந்தால் சரியாகும்.

உடலின் இயக்கத்துக்குத் துணைபுரியும் சக்தி ஓட்டமும், ரத்த ஓட்டமும், காற்றோட்டமும், நிணநீர் ஓட்டமும், சீராகும் போது அவற்றின் தொடர்புடைய அத்தனை உறுப்புகளும் குணமாகும், சீராக இயங்கும்.

பாதச் சிகிச்சை செய்யும் வழிமுறை

பாதச் சிகிச்சை என்பது ஒரு முழுமையான சிகிச்சை முறையாகும். இந்தச் சிகிச்சையை நோய்க்கு, தொந்தரவுக்கு, உறுப்பு பாதிப்புக்கு என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல் தலை முதல் கால் பாதம் வரையில் முழு உடலுக்கும் வழங்கப்படும் முழுமையான சிகிச்சை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சிகிச்சையின் மூலமாக உடலின் உள்ளேயும் வெளியிலும் அத்தனை உபாதைகளையும் குணப்படுத்த முடியும். சிகிச்சையில் வழங்கப்படும் அழுத்தம் சிகிச்சை பெறுபவரின் உடலின் தன்மைக்கு ஏற்ப 100%, 75%, 50% மற்றும் 25% என்ற அழுத்தத்தில் வழங்க வேண்டும்.

பாதச் சிகிச்சையின் கட்டுப்பாடுகள்

பாதச் சிகிச்சை அனைவருக்கும் உகந்த சிகிச்சை ஆனாலும் சில தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், இதயம் தொடர்புடைய தொந்தரவு உள்ளவர்கள், மேலும் சில தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சிகிச்சை பெற்றுக் கொள்பவர்கள், சிகிச்சை பெறுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அல்லது சிகிச்சை முடிந்து இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உணவை உட்கொள்ள வேண்டும். பாதச் சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு பாதங்களைக் கழுவக் கூடாது, குளிக்கக் கூடாது.

பாதச் சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுப்பது அல்லது உறங்குவது சிறந்தது.

பாதச் சிகிச்சையில் குணமாகும் தொந்தரவுகள்

பாதச் சிகிச்சையின் மூலமாக குணமாகும் சில பிரபல்லியமான தொந்தரவுகள். கால் வலி, இடுப்பு வலி, மாதவிடாய் தொந்தரவுகள், மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலி வேதனைகள், ஒற்றைத் தலைவலி, தோள்பட்டை வலி, சிறுநீரகக் கற்களினால் ஏற்படும் வலி, கால் வீக்கம், சயாடிக்கா நவ் பிரச்சனை, அதன் காரணமாக ஏற்படும் கால் வலி, மேலும் பல்வேறு வகையான வலி வேதனைகளைக் குணப்படுத்த முடியும்.

சிகிச்சை மற்றும் வகுப்பு

நான் சேலத்தில், வீட்டில் இருந்தவாறு 7 வருடங்களாக பாதச் சிகிச்சை வழங்கி வருகிறேன். பாதச் சிகிச்சை மற்றுமின்றி, அக்குபஞ்சர், பிராணிக் ஹீலிங் மற்றும் ரெய்கியை கற்றிருக்கிறேன்.

நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பாதச் சிகிச்சை மற்றும் ஹீலிங் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Master Gowri
Shanthi Nagar, Salem, Tamil Nadu, India
Whatsapp Number: +91 9345089064

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X