பிரிவு கவிதை

ஒரு சொட்டு கண்ணீர்

shallow focus of a woman's sad eyes

பெண்ணே நம் பிரிவை
எண்ணி கண்ணீர் சிந்தாதே
உன் கண்ணீர்த் துளிகளுக்கு
தகுதியற்றவன் நான்

சேர்த்துவை உன் கண்ணீரை
என்றோ ஒருநாள் – எனது
மரணச்செய்தி வரும் – அன்று
எனக்காக ஒரு சொட்டு – ஒரே
ஒரு சொட்டு கண்ணீர் சிந்து

அது போதும் எனக்கு
உன் மனதிலாவது வாழ்ந்தேன்
என்ற நிம்மதியுடன் – என்
ஆன்மா சாந்தியடையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X